தே.ஜ.,கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் கூட்டணியின் இறுதிமுடிவு குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.
தமிழக அரசியலை பொறுத்த வரை தற்போதைக்கு பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு குறித்து தனியார் தொலைக்காட்சியில் அவர் பேசியதாவது. .
கேள்வி: வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா?
பதில்: கூட்டணிகட்சிகள் குறித்து கருத்தில் கொள்ளும்போது அதுகுறித்து தற்போது ஆலோசனை நடைபெற வில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போது தேமுதிக, பாமக, ஆகியவை அங்கம் வகிக்கின்றன. கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருவதாக எங்களுடைய தமிழக தலைவர்கள் தெரிவிக்கின்றனர். கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளுடனேயே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல சமூக பின்புலம்கொண்ட சில கட்சிகளும் எங்களுடைய கூட்டணிக்கு வருகின்றன. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவாக்கு வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக அங்கம்வகிப்பதாக கூறுகிறீர்கள். ஆனால், மக்கள் நலக்கூட்டணி, திமுக ஆகியவை தேமுதிகவை கூட்டணிக்காக அழைப்பு விடுத்து வருகின்றன. இதுபற்றிய உங்களுடைய கருத்து என்ன?
பதில்: தற்போது, தேசிய ஜனநயாக கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகள், அதில் நீடித்துவருகின்றன. மதிமுகவைத் தவிர மற்றக் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர்குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி விவாதிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஆனால் அது குறித்து இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பது சிறந்தயுக்தியாக இருக்கிறது. ஆனால் அதில் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை பாரதிய ஜனதாவே வைத்துக் கொள்ளப் போகிறதா? அல்லது கூட்டணியில் அங்கம் வகிப்போரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப் போகிறதா என்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை.
தேர்தல்தொடர்பான அனைத்து முடிவுகளும் பாரதிய ஜனதாவின் மத்திய நாடாளுமன்றகுழு ஆய்வுசெய்து பொங்கல் பண்டிகைக்கு பின் தெரிவிக்கப்படும். முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு, தேர்தல்தொடர்பான யுக்திகள் உள்ளிட்டவை ஜனவரி மாதம் இறுதி செய்யப்படும்
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.