2016-ல் இணைய தளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது இணையதள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 கோடியாக உள்ளது என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2 ஆண்டுகளில் இணைய தளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 50 கோடியை எட்டுவதே இலக்கு என்று முன்னர் தெரிவித்தேன். அந்த இலக்கு அடுத்தண்டு எட்டபட்டுவிடும்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் வரும் ஆண்டுகளில் கண்ணாடியிழை கேபிள் மூலம் (ஆப்டிக் ஃபைபர்) 2.5 லட்சம் கிராம பஞ் சாயத்துகள் இணைக்கப்படும் . ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கிராமம் தேர்வுசெய்யப்பட்டு தகவல் தொழில்நுட்பம் மூலம் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். டிஜிட்டல் கிராமத்தில் இகல்வி, டெலிமெடிசின் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொலை மருத்துவசேவை (டெலி மெடிசின்) அளிப்பதற்கு மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைக்கபடும். அதேபோல தொலைதூர வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.