பிரதமர் மோடியை எக்ஸ் வலை தளத்தில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளது. உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிக பாலோயர்கள் கொண்ட 7வது பிரபலமாக உள்ளார் மோடி.
உலக அளவில் தலைவர் பொறுப்பில் உள்ளவர்களை ஏராளமானோர் ,எக்ஸ் வலை தளம் உட்பட அனைத்து சமூக வலை தளத்திலும் பாலோ செய்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மோடிக்கும் அனைத்து சமூக வலை தளங்களிலும் பாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் வலை தளத்தில் பிரதமரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் (10 கோடி) ஆக அதிகரித்து உள்ளது.
இவரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (38.1 மில்லியன் ), துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது (11.2 மில்லியன்) மற்றும் போப் பிரான்சிஸ் (18.5 மில்லியன்) ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவிலும் அரசியல் தலைவர்களை பாலோ செய்வர்களில் பிரதமரே முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்-க்கு 26.4 மில்லியன் , டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (19.9 மில்லியன்), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (7.4 மில்லியன்), ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் (2.9 மில்லியன்) என அடுத்தடுத்து உள்ளனர்.
அரசியல் வாதிகளை தவிர விராட் கோலி (64.1 மில்லியன்), பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (63.6 மில்லியன்), அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (52.9 மில்லியன்) உள்ளிட்டோரும் பிரதமருக்கு அடுத்த நிலையிலே யே உள்ளனர்.
பிரதமரை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை எக்ஸ் வலை தளத்தை தவிர்த்து யூடியூப்பில் 25 மில்லியன் பேர்களும் இன்ஸ்டாகிராம் கணக்கில் 91 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.
பிரதமரின் எக்ஸ் வலை தளம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் பாலோயர்கள் அதிகரித்து உள்ளனர். பிரதமர் சமூக வலை தளத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதாலும், அனைத்து தரப்பினரின் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிப்பதாலும், யாராலும் அணுகுவதற்கு எளிதாக இருப்பதும் பாலோயர்கள் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |