ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரமாண்ட மாநாடு புனேயில் நாளை நடை பெறுகிறது. இதில் 1.5 லட்சத்துக்கு மேற்பட்டதொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் புற நகர் பகுதியான ஹிஞ்சேவாடாவில் ஆர்எஸ்எஸ் மாநாடு நாளை நடக்கிறது. இதற்காக 450 ஏக்கரில் பந்தல்அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. மகாராஷ்டிராவின் மேற்கு மாவட்டங்களான புனே, நாசிக், அகமதுநகர், சதாரா, சாங்லி, சோலாப்பூர், கோலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்இருந்து இதில் பங்கேற்க தொண்டர்கள் முன் பதிவு செய்துள்ளனர். இந்தமாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக ராய்கர் கோட்டையின் ஒன்பது அடுக்குகளை கொண்டமேடை அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநாட்டு அமைப்பாளர்கள் கூறுகையில், ஒலிமாசுவை அதிகரிக்கும் பெரிய ஒலி பெருக்கிகளை நாங்கள் பயன்படுத்த போவதில்லை. சாதாரண மைக்குகளில்தான் பேசவுள்ளோம். அவை கடைசிவரிசையில் உள்ளவர்களுக்கு தெளிவாக கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. உணவு உள்ளிட்டவற்றுக்கு பாக்கு மரதட்டுகளை பயன்படுத்த உள்ளோம். இதன் மூலம் சுற்றுச்சூழல் காக்கப்படும் என்றனர்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.