பா.ஜ.,கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா 2வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக தலைவராக பொறுப்பேற்ற அமித் ஷாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
வரும் 2019ம் ஆண்டு ஜனவரி வரை அமித்ஷா தலைவராக பொறுப்பு வகிப்பார்.
கடந்த 2014ல் நடந்த பொதுத்தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்ததில், அமித் ஷாவுக்கு முக்கியபங்கு உண்டு.
அமித் ஷாவின் நவீன பிரசார உத்திகளால், காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேர்தலில் தவிடுபொடியானது . லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும், இவரின் அணுகுமுறைகளால், பா.ஜ., மந்திர வெற்றிகளை குவித்தது.
அமித் ஷாவை பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் கட்சியும் ஆட்சியையும் ஒரே திசையில் எந்த பிரச்சனையும் இன்றி போகும் என்ற நம்பிக்கை வலுவாகவே உள்ளது.
மேலும் இந்தாண்டில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, பா.ஜ.,வை வழிநடத்திசெல்ல, அமித் ஷாவின் வருகை கட்சிக்கு வலு சேர்க்கும்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.