ஹரியானாவில் அமித் ஷா ஆற்றிய உரை

ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கௌரவ மாநாட்டில் (பிச்ச்தா வர்க் சம்மான் சம்மேளன்) மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். ஹரியானா முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர்கள் திரு ராவ் இந்தர்ஜித் சிங், திரு கிரிஷன் பால் குர்ஜார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ஹரியானா மண் இந்தியாவில் மூன்று விஷயங்களுக்கு பிரபலமானது என்றார்   ராணுவத்தில் அதிகபட்ச வீரர்கள், அதிக விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக உணவு தானிய உற்பத்தி ஆகியவற்றுக்கு ஹரியானா புகழ்பெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமராக திரு நரேந்திர மோடி பதவியேற்றபோது, இந்த அரசு,தலித்துகள், ஏழைகள், பின்தங்கியவர்களுக்கான அரசு என்று கூறியதை நினைவுகூர்ந்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதலாவது வலுவான பிரதமர் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள 71 பேரில், 27 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஓபிசி சமூகத்திற்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் நீட் தேர்வுகளில் முதல் முறையாக 27 சதவீத இடஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக ஹரியானா அரசும் பல திட்டங்களை செயல்படுத்துவதாக  அமித் ஷா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...