பெங்களூருவில் நேற்றுதொடங்கிய சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் சிராடி வனப் பகுதியில் சுரங்கப் பாதை அமைத்தல், பெங்களூரு-மைசூரு இடையே நெடுஞ்சாலை அமைத்தல் உள்ளிட்ட சாலைகளை கட்டமைக்கவும், துறை முகங்களை மேம்படுத்தவும் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அமல்படுத்தபடும். நாட்டில் 52 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ் சாலைகள் உள்ளன. கர்நாடகத்தில் 9 ஆயிரத்து 632 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ் சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தபணிகள் விரைவில் தொடங்கப்படும்.
நாட்டில் தற்போது தினமும் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ் சாலை அமைக்கப்படுகிறது. இதை 30 கிலோ மீட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலையின் தூரத்தை 1.50 லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 6 துறைமுகங்கள் உள்ளன. இதில் மங்களூரு துறைமுகம் ரூ.10 ஆயிரம்கோடியில் மேம்படுத்தப்படும். புதிதாக 4 கலங்கரை விளக்கம் (லைட்ஹவுஸ்) அமைக்கப்படும்.
பெங்களூருவில் கடுமையான போக்குவரத்துநெரிசல் உண்டாகிறது. பெங்களூருவுக்கு வரும் போது நானும் இதில்சிக்கிய அனுபவம் எனக்கு உள்ளது. இந்தபிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். இதற்கு மத்திய அரசு உதவி செய்யும் இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.