''பாரத் மாதா கி ஜே'' என முழக்க மிடுவது எனது உரிமை என காங்., எம்பி.,யும், பிரபல இந்திசினிமா பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் ராஜ்ய சபாவில் பேசினார். அரசும் எதிர்க் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இட்டிஹாதுல் முஸ்லீமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியைச் சேர்ந்த எம்.பி., ஒவைசி நேற்று அளித்த பேட்டியின்போது, பாரத் மாதா கி ஜே என ஒருபோதும் நான் முழக்கமிட மாட்டேன். அப்படி முழக்கமிட்டே தீரவேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் என்னால் அவ்வாறு முழக்க மிட முடியாது என பேசினார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒவைசியின் இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று ராஜ்ய சபாவில் பேசிய சினிமா பாடலாசிரியரும், காங்., எம்.பி.,யுமான ஜாவேத் அக்தர், எதிர்க் கட்சிகளும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அவை ஒத்தி வைப்புக்களோ, கூச்சல்குழப்பமோ முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. தயவுசெய்து அடுத்த தேர்தலுக்கு ஆதாயம்தேட வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து விட்டு, நாட்டைப்பற்றி சிந்தியுங்கள் என்றார். அக்தரின் இந்த கருத்தை பலகட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து பேசிய அக்தர், பாரத் மாதா கி ஜே என முழங்கவேண்டும் என சட்டத்தில் குறிப்பிடவில்லை என ஒவைசி பேசி உள்ளார். ஷெர்வானி, தொப்பி அணியவேண்டும் என்று கூடத்தான் சட்டத்தில் இல்லை. பாரத் மாதா கி ஜே என முழங்குவது எனது கடமையா இல்லையா என்பது பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் அப்படி முழக்கமிடுவது எனது உரிமை என்றவர், தொடர்ந்து பல முறை பாரத் மாதா கி ஜே என ராஜ்யசபாவில் முழக்கமிட்டார்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.