”தன் பாவங்களுக்காக, அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருபோதும் மரியாதை அளித்தது இல்லை,” என, பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.
நம் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
நம் நாட்டில் அனைவருக்கும் சமமான ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும், சிறுபான்மையினருக்கு உரிமை இல்லை என, ஒருசிலர் கூறுகின்றனர். நம் நாட்டில் சிறுபான்மையினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை.
சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாக்., – ஆப்கானிஸ்தான் – வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது அனைவரும் அறிந்ததே.
நம் நாடு மிகவும் பாதுகாப்பானது என்பதால் தான், அவர்கள் நம் நாட்டில் தஞ்சம் அடைகின்றனர். அனைவருக்கும் ஏற்ற நாடாக நம் நாடு விளங்குகிறது. நிறைய பாவங்களை காங்., செய்துள்ளது. இதற்காக அக்கட்சி அம்பேத்கரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 1952 லோக்சபா தேர்தலில், காங்., வெளிப்படையாக அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது.
பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த அக்கட்சி, அவருக்கு, ‘பாரத ரத்னா’ விருது வழங்க முன்வரவில்லை. பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன், அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளில் பட்டியல் ஜாதியினர் பற்றி நேரு ஒரு முறை கூட பேசவில்லை என, அம்பேத்கரே கூறி உள்ளார்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |