மார்க்சிஸ்ட் கட்சியின் வன்முறை அரசியலுக்கு, வாக்குகளின் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திருவனந்தபுரத்தில் கூறினார்.
கடந்த சிலதினங்களுக்கு முன் திருவனந்தபுரம் காட்டாயிகோணம் பகுதியில் பாஜ மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே பயங்கரமோதல் ஏற்பட்டது. இதில் பாஜ மாநில தலைவர் முரளீதரன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தமோதலில் அமல் கிருஷ்ணா என்ற ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் திருவனந்த புரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமல்கிருஷ்ணாவை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்கு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனிவிமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று அமல் கிருஷ்ணாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அமித்ஷா நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவிலும், மேற்குவங்காளத்திலும் மார்க்சிஸ்ட் கட்சியினர் வன்முறை அரசியலை தூண்டிவிடுகின்றனர். பல ஆண்டுகளாக கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாஜக தொண்டர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் எத்தனை பாஜக தொண்டர்களை அழித்தாலும் பாஜ மேலும் மேலும் வளரும். உலகம் முழுவதும் கம்யூனிசம் அழிந்துவருகிறது. இந்தியாவிலும் இக்கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கி விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் வன்முறை அரசியலுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.