வியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்ன?

வியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்னவென்றால், தேவர்களுக்குக் குருவான ஸ்ரீபிரகஸ்பதியும், அசுரர்களுக்கு குருவான ஸ்ரீசுக்ரரும், குரு மூர்த்திகளாகத் தோன்றிய புனித நாளாகும். ஸ்ரீசுக்கிரருக்கு உரிய கிழமை வெள்ளி என்றாலும், நவக்கிரகச் சுக்கிர மூர்த்தி அம்சங்களைக் கொண்டவரும், அசுரர்களுக்கு குருவும் ஆன சுக்கிரர்கள் வெவ்வேறு மூர்த்திகள் ஆவர். இதே வகையில் சென்னை திருமயிலைச் சுயம்பு மூர்த்தியாகிய ஸ்ரீவெள்ளீஸ்வரச் சுயம்பு லிங்கச் சிவபெருமானை

வழிபட்டுத் தாம் இழந்த கண்ணைப் பெற்றச் "சுக்கிரரும்" பல சுக்கிர அம்சங்களைப் பூண்டவர் ஆவார். எனவே, வியாழன் என்பது தேவ குரு, அசுர மூர்த்திகளின் அமிர்த அனுகிரகப் பொழிவு நாளாகும்.

தேவர்கள், அசுரர்கள் என்ற வகையாக நாம் புராணங்களில் கண்டாலும், கலியுலகில், பெரும்பான்மையான மக்கள், தேவ குணங்களாகிய நற்குணங்கள், அசுர குணமாகிய தீய ஒழுக்கங்கள் கலந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே நற்குணங்கள் விருத்தியாக ஸ்ரீபிரகஸ்பதியையும், பகைமை, குரோதம், பொறாமை போன்ற தீய அசுர குணங்கள் அகல ஸ்ரீசுக்கிரரையும் ஆகிய இரு குருமூர்த்திகளையும் வழிபட வேண்டிய குருஅம்சத் திருநாளாக இன்றைய வியாழக் கிழமை துலங்குகின்றது.

இன்று கூடும் ஆயில்ய நட்சத்திரமானது, சிறப்பான மருத்துவ அம்சங்களைப் பூண்டதாகும். உடல் நோய்களுக்குத் தக்க மருந்துகளையும், மன உடலில் உள்ள நோய்களான பொறாமை, விரோதம், குரோதம் போன்ற மனவகை நோய்களையும் தீர்க்க வல்ல மாமருந்து நட்சத்திர நாளே ஆயில்ய நட்சத்திரத் திருநாளாகும்.

திதிகளில் புனித சக்தியை அபரிமிதமாகப் பொழிந்து தருவது ஏகாதசித் திதியாகும். சிம்ம ராசியில் சந்திர மூர்த்தி அமர்ந்து, குரு மூர்த்தியை யோக மூர்த்தியாகப் பூஜிக்கும் நன்னாளும், ஏகாதசி குருவாரமும், ஆயில்ய நட்சத்திரமும் கூடுகின்ற விசேஷமான நாளும் இதுவேயாம்.

இவ்வாறு நாளுக்கு நாள் எத்தனையோ விசேஷ அம்சங்கள் பொதிந்து இருக்கின்றன. இவற்றை, இவ்வகையில், விளக்க வல்லவரே சற்குரு ஆவார். இதில் சித்த யோக அம்சங்களும் கூடுவதால், மிக வலிமையான, புனிதமான தெய்வீக சக்திகள் தீர்த்தப் பூர்வமாகப் பூவுலகில் சுரக்கும் திருநாள் இதுவே.

இத்தகைய அரிய பலா பலன்களைக் கொண்ட நாளின் தெய்வீக சக்திகளை எவ்வாறு பெறுவது ?

குருவார விரதம், ஏகாதசித் திதி விரதம் இணைந்து வரும் நாளாதலின், துளசி, வில்வம் இரண்டையும் புனிதமான புண்ணிய தீர்த்த நீர் அல்லது ஊற்று நீரில் ஊற வைத்து, மூங்கில் குவளை, வெள்ளித் தம்ளர், சுரைக் குடுவை போன்றவற்றில் நிரப்பி, இதனை மட்டும் அருந்தி விரதம் இருந்து, பெருமாள், சிவ மூர்த்திகள் இரண்டும் உள்ள ஆலயங்களில் பூஜிப்பது மிகவும் விசேஷமானது.(திருநெடுங்களம் ஸ்ரீநெடுங்களநாதர் + ஸ்ரீவரதராஜர், உத்தமர்கோவில், திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் + ஸ்ரீவேணுகோபாலர்). இவ்வாறு வழிபட்டு, அங்கப் பிரதட்சிணம், நடைப் பிரதட்சிணம் கடைபிடித்தல் விசேஷமானது ஆகும்.

பொதுவாக அடிக்கடி மனக்கிளர்ச்சி ஏற்படுபவர்கள், மனோபலம் இல்லாதவர்கள், மனபயம் உள்ளவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் இந்த சக்தி வாய்ந்த நாளை நன்கு பயன்படுத்திக் கொண்டு தற்காப்பு சக்திகளைப் பெற வேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...