விஜய் மல்லையாவை நீதிக்குமுன் நிறுத்த அரசு திடமாக உள்ளது

வங்கிக்கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லை யாவை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையை தீவிரப் படுத்தியுள்ள மத்திய அரசு அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உத்தர விட்டது.

முன்னதாக அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லை யாவின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக முடக்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது, தங்களது விளக்கம்கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மல்லையா அளித்த பதில், அமலாக்க துறையினர் அளித்த தரவுகள், மற்றும் ஜாமீனில் வரமுடியாத கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது ஆகியவற்றை கருத்தில்கொண்டு தற்போது நிரந்தரமாக விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது மத்திய வெளியுறவு அமைச்சகம்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது:

விஜய் மல்லையா சமர்ப்பித்த பதில்கள், அமலாக்க துறையினர் பகிர்ந்துகொண்ட தகவல்கள், மற்றும் ஜாமீனற்ற கைதுவாரண்ட் ஆகியவற்றைப் பரிசீலித்து பாஸ்போர்ட் சட்டப் பிரிவு 10 (3), (சி) மற்றும் 19 (3) (எச்) ஆகிய பிரிவுகளின்கீழ்  முடக்கப்படுகிறது, என்று கூறியுள்ளார்.

மேலும் விஜய் மல்லையாவை நீதிக்குமுன் நிறுத்த அரசு திடமாக உள்ளது. தற்போது அவரை இந்தியா கொண்டு வருவதற்கான சட்ட ஆலோசனைகளில் மத்தியஅரசு ஈடுபட்டுள்ளது.

தன்னுடைய வெளி நாட்டு சொத்துக்களை தான் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை என்று விஜய் மல்லையா திட்டவட்டமாக மறுத்ததையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் அமலாக்க துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...