தேசிய பேரிடர் மீட்பு படையின் 2-வது மலையேற்றப் பயணக்குழுவான விஜய் குழுவை அமித் ஷா பாராட்டினார்

21,625 அடி உயர மணிரங் மலையில் வெற்றிகரமாக ஏறித்திரும்பிய தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டாவது மலையேற்றப் பயணக்குழுவான விஜய்  குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று  (29.06.2024) புதுதில்லியில் வரவேற்றார்.மத்திய உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குநர் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பேரிடர் மேலாண்மைத் துறை ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியையும் உள்துறை அமைச்சர் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் பயன்படுத்தும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் துருக்கியில் பல்வேறு பேரிடர் மீட்புசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இந்த நிகழ்ச்சியின்போது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்பது, நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்பது, இடிந்து விழுந்த கட்டடங்களில் தேடுதல் மற்றும் மீட்புப்பணி, மலைகளில் மீட்பு, ஆழ்துளை கிணறுகளில் விழுந்தவர்களை மீட்பது, புயல்களின்போது மீட்புப்பணி போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் தேசியப்பேரிடர் மீட்புப்படையினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பாராட்டினார். தேசியப்பேரிடர் மீட்புப் படையின் உபகரணங்களை மேலும் மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.

21,625 உயரமான மணிரங் மலையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக தேசியப் பேரிடர் மீட்புப்படையினரை அமித் ஷா பாராட்டினார்.  இதுபோன்ற மலையேற்றப்பயணங்களில் இலக்குகளை அடைவது மிகப் பெரிய சாதனை என்று  அமைச்சர் கூறினார்.

ஆபரேஷன் விஜய் என்ற இந்த மலையேற்றப் பயணக்குழுவில் இடம்பெற்ற 35 வீரர்களுக்கும், தேசியப்  பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநருக்கும் மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீரர்கள்  21,600 அடிக்கும் அதிகமான உயரத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியது ஒட்டுமொத்த படையினருக்கும் மிகப்பெரிய சாதனை விஷயமாகும் என்று அமித்  ஷா கூறினார். நாம் வெற்றியின் உச்சியை அடைய வேண்டும் என்றால், வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான இலக்கை நாம் பின்பற்ற வேண்டும், அப்போதுதான் வெற்றியை அடைய முடியும் என்று அவர் கூறினார்.

தற்போது நாட்டில் பேரிடர் மேலாண்மை என்பதில்  உயிரிழப்பு இல்லாத அணுகுமுறை பின்பற்றப்படுகிறது என்றும் நிவாரணத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறை அல்ல என்றும் திரு அமித் ஷா கூறினார். பேரிடர் மேலாண்மை அணுகுமுறையைப் பொறுத்தவரை இது இந்தியாவின் மகத்தான செயல்பாடு என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர்களை சமாளிக்க சிறந்த நடைமுறைகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது உலகில் எங்காவது பேரிடர் ஏற்பட்டால், அனைவரும் நமது தேசியப் பேரிடர் மீட்புப் படையின் சேவையை எதிர்நோக்குகின்றனர் என்று அவர் கூறினார்.  துருக்கி, சிரியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் பேரிடர்களின்போது இந்தியப் பேரிடர் மீட்புப் படையினர் ஆற்றிய பணிகளை அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில், பருவநிலை மாற்றம் காரணமாக, பனிச்சரிவு, நிலச்சரிவுகள், வெள்ளம், புயல்கள் போன்ற அபாயங்கள் எல்லா இடங்களிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதை மனதில் கொண்டு, பூஜ்ய உயிரிழப்பு என்ற இலக்கை நோக்கி நாம் உறுதியாகச் செல்ல வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...