உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடியின் உருவச்சிலை நேற்று நிறுவப்பட்டது.
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் மேடம்டுசாட்ஸ் அருங்காட்சிய கத்தின் தலைமையகம் உள்ளது. அங்கு மகாத்மா காந்தி, வின்சன்ட் சர்ச்சில் உட்பட உலக தலைவர்கள் பலரின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட்கேமரூன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே உள்ளிட்டோ ரின் மெழுகு சிலைகளும் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றன.
அந்தவரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுசிலையும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நேற்று நிறுவப்பட் டது. குர்தா, ஜாக்கெட் உடையுடன் இரு கைகூப்பி வணக்கம் தெரிவிப்பதுபோல அவரது சிலை செதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தயாரான இச்சிலை இங்கிருந்து லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது.
லண்டன் மட்டுமன்றி மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் அமைந்துள்ள சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் ஆகிய நகரங்களிலும் மோடியின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மோடி சிலையும் ரூ.1.45 கோடி செலவில் 4 மாத உழைப்பில் உருவாகியிருப்பதாக அருங்காட்சியக பொதுமேலாளர் எட்வர்ட் புல்லர் தெரிவித்தார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.