உள்க்கட்டமைப்பு துறையில் ரூ. 25 லட்சம்கோடி முதலீடு 4 கோடி பேருக்கு வேலை

அடுத்த 3 ஆண்டுகளில் உள்க்கட்டமைப்பு துறையில் ரூ. 25 லட்சம்கோடி முதலீடு செய்யப்படும். இதன் வாயிலாக 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்குவந்த 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதன் சாதனைகள் மற்றும் எதிர் கால திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் கட்கரி பிடிஐக்கு அளித்த பேட்டி: உள்கட்டமைப்பு துறையில் கடந்த இரண்டுஆண்டுகளில் ரூ. இரண்டரை லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்ததுறையில் முதலீடு குறைந்ததற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறுகளே காரணம்.

பல்வேறு தடைகள் காரணமாக பலதிட்டங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. ஏறத்தாழ 403 திட்டங்கள் முடக்கப் பட்டடிருந்தன. அவற்றில் பெரும்பாலான திட்டங்களுக்கு தற்போது அனுமதிகிடைத்துள்ளது. ரூ. 4 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. அடுத்த மூன்றுஆண்டுகளில் இந்த துறையில் ரூ. 25 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டின் உற்பத்தி 3 சதவீதம் அளவுக்கு உயரும். நெடுஞ்சாலைதுறை தொடர்பாக 21 முக்கிய கொள்கை முடிவுகளுக்கு மத்தியமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2017ம் ஆண்டில்மட்டும் ரூ. 5 லட்சம் கோடி இந்ததுறையில் முதலீடு செய்யப்படும். துறைமுகங்கள் மேம்பாட்டுக்காக ரூ. 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. உலக தரம்வாய்ந்த உள்கட்டமைப்புகளை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. பணம் இதற்கு தடையாக இல்லை. சாகர்மாலா திட்டத்துக்காக மட்டும் ரூ. 12 லட்சம்கோடி செலவிடப்பட உள்ளது. இவ்வாறு கட்கரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...