2024 மார்ச் வரை உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 14 துறைகளில் 755 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரூ.1.23 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
செல்பேசி தயாரிப்பு, மருந்துப் பொருட்கள் உற்பத்தி, மருத்துவ சாதனங்கள் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தி, தொலைதொடர்பு சாதனங்கள், குளிர்சாதன பெட்டிகள், எல்இடி பல்புகள், உணவுப்பொருட்கள், ஜவுளி, சூரிய மின்சக்திக்கான தகடுகள், வேதியியல் மின்கலங்கள், ட்ரோன்கள் போன்ற துறைகளில் இந்த முதலீடு ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
முக்கியத் துறைகளிலும், அதிநவீன தொழில்நுட்பத்திலும் முதலீடுகளை ஈர்ப்பது, உற்பத்தித் துறையில் செயல் திறனை உறுதி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இந்திய நிறுவனங்களையும், உற்பத்தியாளர்களையும் உலக அளவில் போட்டியிட செய்வது போன்றவை உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் நோக்கங்களாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |