பாஜகவின் இரண்டாண்டு கால ஆட்சி சுதந்திர இந்தியாவின் சிறந்த ஆட்சியாக அமைந்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
மத்திய பாஜக அரசின் இரண்டாண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கக்கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமைவகித்தார். இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
பாஜகவின் இரண்டாண்டுகால ஆட்சியை சுதந்திர இந்தியாவின் சிறந்த ஆட்சி காலமாக மக்கள் கருதுகின்றனர். மக்களுக்காகமட்டுமே யோசிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் இவை சாத்தியமாகி உள்ளது. நரிக் குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது பாஜக அரசின் சமீபத்திய சாதனைகளில் மிகவும் முக்கியமானது. சுதந்திரம்கிடைத்து இத்தனை ஆண்டுகளில் ஒருசமுகம் அங்கீகாரத்துக்காக அலைந்தது மிகவும் கொடுமையான ஒன்று. அதை உணர்ந்த பிரதமர் நரேந்திரமோடி எந்தக் கட்சியும் செய்யத் துணியாத சாதனையை செய்துள்ளார் என்றார்.
ஒருதரமான தேநீரின் விலை பத்து ரூபாய். ஆனால், பிரதமரின் காப்பீடுதிட்டத்துக்கு மாதம் 1 ரூபாய் செலவழித்தால் போதும். இது போன்ற மத்திய அரசின் தரமான திட்டங்கள் அனைத்தும் மாநில மக்களுக்கு தெரியாமல் உள்ளது. இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது பாஜக உறுப்பினர்களின் கடமை என்றார்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.