ஆட்சி நேர்மையாகவும், நீதி தவறாமல் இருக்கவும் சோழர்கள் பயன்படுத்தியதுதான் செங்கோல் என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறினார்.
இது குறித்து எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செங்கோல் தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கிறது. செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சமாஜ்வாதி எம்.பி.யின் அறியாமையை காட்டுகிறது. சமாஜ்வாதி எம்.பி., பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
செங்கோலை அவமதிக்கும் செயலுக்கு திமுக மற்றும் இந்தியா கூட்டணியினர் துணை போகிறார்கள். ஆட்சி நேர்மையாகவும், நீதி தவறாமல் இருக்கவும் சோழர்கள் பயன்படுத்தியது தான் செங்கோல்.
சிறந்த ஆட்சியை கொடுத்தவர்கள் சோழர்கள். தெற்கு ஆசியா முழுவதும் ஆட்சிசெய்த சோழர்கள் தமிழர்களின் பெருமையை கொண்டு சேர்த்தனர். பார்லிமென்டில் செங்கோலை சாதாரணமாக வைக்கவில்லை. பிரதமர் மோடி தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். பார்லிமென்டில் செங்கோலை நிறுவி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் கூறினார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |