வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டுவருகிறது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற "பிரமோத் மகாஜன் திறன் வளர்ப்பு, தொழில் முனைவுத் திட்டம்' தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இப்போது இந்தியா இளைஞர்கள் அதிகமுள்ள நாடாகஉள்ளது நமது அதிர்ஷ்டம். கடந்த ஆட்சியில் கடைப் பிடிக்கப்பட்ட தவறான கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. ஆனால் இப்போது ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்துள்ளது. திறன்மிகு இந்தியா, முத்ராவங்கி, "ஸ்டார்ட் அப் இந்தியா', "ஸ்டாண்ட் அப் இந்தியா' ஆகியதிட்டங்கள் மூலம் நாட்டில் வேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்கப்பாடுபட்டு வருகிறது.
நமது நாட்டில் வேளாண்மை முக்கியத்தொழிலாக உள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளனர். எனினும் இந்தத்தொழில் லாபகரமானதாக இல்லை. எனவே, மக்கள் விவசாயத்தைமட்டுமே அதிகம் சார்ந்திருக்காமல், பிற தொழில்களிலும் ஈடுபடும்நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது ஜி.டி.பி அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏழைமக்களுக்காக 1 கோடி பேர் தங்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். நமது நாடு இப்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது. சர்வதேசளவில் மிகவேகமாக வளரும்பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார் அமித்ஷா.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.