தீஸ்தா செதல்வாக்கு வைக்கப்பட்ட ஆப்பு-

சமூக சேவகி என்ற பெயரில் நம் நாட்டில் சில அப்ரண் டிஸ்கள் அப்பாவி மக்களையும்.அரசாங்கத்தையும் ஏமா ற்றி வயிறு வளர்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் முதன்மை யானவர் டீஸ்டா செடல்வாட் . குஜராத்தை சேர்ந்த இவரும் இவருடைய கணவரும் மோடியையும் பிஜேபி அரசையும் டார்கெட் செய்து அரசியல் செய்வதே இவர்களின் பிழைப்பு.

குஜராத்தில் 2002ல் அப்பாவி கரசேவகர்களை சபர்மதி எக்ஸ்பிரஸில் வைத்து சில தீவிரவாதிகள் கொளுத்திய தால்  நடத்த வன்முறையில் அப்பாவி முஸ்லிம் களும் பாதிக்கப்பட்டனர்.

அப்படி பாதிக்கபட்ட முஸ்லிம்களை தேடிபிடித்து அவர் க ளை மோடிக்கு எதிராக திருப்பிவிடும் வேலையில் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் கைகோர்த்து நின்றார் கள்.இவர்களுக்கு துணைபுரிய டீஸ்தா செதல்வாட் மாதி ரிஅரை வேக்காட்டு அப்ரண்டிஸ்களும் களத்தில் இறங் கி னார்கள்.அதில் டீஸ்தா செதல்வாட் செய்த காரியங்க
ளுக்குகுஜராத் கலவரத்தை விசாரித்த சிறப்பு புலனாய்வு அமைப் பே நக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் இந்த அம்மையாரின் திரைக்கதையில் இருந்த கற்பனை களை குறை கூறியது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இப்படியும்எஸ்ஐடி விசாரணை நடந்த பொழுது மத்திய காங்கிரஸ் அரசு மோடியை குஜராத் கலவரத்தில் எப்படி யா வது சிக்கவைக்க சாம பேத தான தண்டங்களை பயன்ப டுத்தி சாட்சியங்களை தயார்படுத்தி கொண்டிரு ந்தார்கள்.அவர்களுக்கு ஆள் பிடித்து கொண்டிருந்த வே லையைகாசு வாங்கி கொண்டு செய்து கொண்டிருந்த டீஸ்தா செதல்வாட்டும் ஜாவித் என்ற இவரின் கணவ ரும் சேர்ந்து நடத்திக்கொண்டிருந்த கம்யூனலிஸம் காம்பாக்ட் என்ற இதழில் மோடியை திட்டுகிற செய்தி யை தவிர வேறு எந்த செய்தியையும் போட மாட்டார் கள்.

குஜராத் கலவரம் என்றாலே பெஸ்ட் பேக்கரி கொலை வழக்கு எல்லோருக்கும் நினைவு வரும்.அந்த பெஸ்ட்
பேக்கரி வழக்கில் முக்கிய சாட்சியாக இந்த புரோக்கரால் அடையாளப்படுத்தபட்ட சாகிரா சேக் போன்ற குடும்ப உறுப் பினர்களை பெஸ்ட் பேக்கரி கலவரத்தில் உறவினர் களை பலி கொடுத்த இளம்பெண் மும்பை நீதி மன்றத்தில் என்ன சொன்னார்கள் தெரியுமா?

டீஸ்டா செடல்வாட் எங்களுக்கு பணம் கொடுத்து குற்ற வாளிகளை அடையாளம் சொல்ல சொன்னார்.அவர்
சொன்ன படியே நாங்கள் பணம் வாங்கிகொண்டு பொய் சாட்சியம் சொன்னோம் எங்களை மன்னித்து கொள்ளு ங் கள் என்று குஜராத்தில் அல்ல மகாராஸ்ட்டிரா மாநில த்தி ன் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார்களே இந்த இளம்பெண்கள்.அப்பொழுதே மானம் கொஞ்சமாவது இருந்திருந்தால் சமூக சேவகி தூக்கில் தொங்கியிரு ப்பாள்.

ஆனால் என்ன செய்வது மானத்தை பார்த்தால் இந்த சமூகத்தில் வாழ முடியுமா என்பது சமூகத்தில் சேவை
செய்து கொண்டிருக்கும் இந்த அம்மணிக்கு தெரியாதா? இந்த சமூக சேவையை பாராட்டி இவருக்கு காங்கிரஸ் அரசு பத்மஸ்ரீ பட்டம் வேறு கொடுத்து இந்தியாவையே கேவலப்படுத்தியது.

இவரின் கேவலமான செயல் எது தெரியுமா?குஜராத் கல வரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகி றோ ம் வீடு கட்டி கொடுக்கிறோம் என்று கோடிக்கண க்கில் பணத்தினை வசூலித்து பேருக்கு கலவரத்தில் பாதிக்கபட்ட மக்கள்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் சாட்சி சொல்ல வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் தரப்படும் என்று போர்டு எழுதி வைத்து நிவாரணம் வழங்கிய இந்த புண்ணியவதி

கடைசியில் கலவரத்தில் வீடுகளை இழந்த மக்கள்களு க்கு ஒரு கக்கூசை கூட கட்டி கொடுக்கவில் லை .மாறா க குல்பர்க் சொசைட்டி என்ற பெயரில் வசூலிக் கபட்ட பணத்தினை ஆட்டைய போட்டு சுகபோகமாக வாழ்ந்த கொள்கை வாதி.

இப்படி அனைத்து திருட்டுதனங்களுக்கும் மொத்த குத்த கைதாரியான டீஸ்டா சப்ராங் டிரஸ்ட் மற்றும் சப்ராங் கம்யூனிகேசன்ஸ் அண்ட் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில்என்ஜிஓக்களை நடத்திக்கொண்டு இரு ந் தார்.இதன் வேலையே இந்து மதத்தினை இழிவு படு த்து வதேயாகும் அது மட்டுமல்லாமல் உலக நாடுகளு க்கு இதன் உறுப்பினர்கள் போய் இந்தியாவில் மத சுத ந்திரம்இல்லை.முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களு க்கும் பாதுகாப்பு இல்லை இதற்கெல்ல்லாம் காரண ம் பிஜேபி என்ற கட்சிதான் என்று உலகமெங்கும் ஒப்பாரி வைத்து கொண்டிருந்தார்கள்.

காமெடி என்ன வென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என்று மூலைக்கு மூலை நின்று ஒப்பாரி வைக்கும்
இவர்கள் அதே அமெரிக்காவில் போய் இந்த பிஜேபிதான் இந்தியாவில் உங்க பணத்தினால் நடக்கும் மதமாற்ற த்தைதடுக்கிறது.இதனால் மதமாற்றம் குறைந்து உங்க ள் பிழைப்பில் மண் விழுந்துவிடும் அதனால் இந்தியா வில்மததீவிரவாதம் பெருகிவிட்டது என்று அறிவிக்க சொல்லி அமெரிக்காவுக்கு அட்வைஸ் கொடுப்பவர்கள்.

இப்படி நம்ம நாட்டில் பிறந்து நம்ம மண்ணில் வளர்ந்து நம்ம சோற்றை சாப்பிட்டு நம்முடைய தாய் நாட்டையே குறை சொல்லும் இந்த மூடர்களை சோறு போட்டு வளர் க் க நாங்கள் என்ன காங்கிரஸ் கூமுட்டைகளா.. இல்லையே..சிங்கங்கள்..பாரதத்தாயின் தவப்புதல்வர் கள்.
.
பார்த்தார் மோடி எங்கம்மா கணக்கு என்றார் எதற்கு கணக் கு என்று அம்மணி முறைக்க கணக்குகளை சரி பார்க்க டீம்போனது,கடைசியில் எல்லாமே ஓட்டைக ள்.இந்த என்ஜிஓஎன்கிற non-governmental organization என்ற அமைப்புகள் இந்தியாவில் சுமார் 31 இலட்சம் உள்ளது.இதில் சுமார் 3லட்சம் என்ஜிஓக்கள் தான் தங்களுக்கு வருகிற பணத்தை யும் செலவழிக்கிற பணத்திற்க்கும் கணக்கு வைத்து செய ல் படுகிறார்கள்
.
மற்றவர்கள் எல்லாம் தொண்டு நிறுவனங் கள் என்ற பெய ரில்கணக்கு வழக்கில்லாமல் வெளிநாடுக ளில் பணம் வாங்கி கொண்டு இங்குள்ள ஏழை இந்துக்களுக்கு பணம் கொடுத்து மதமாற்றம் நடத்தி வருகின்றது. அத னால் தான் மத்திய அரசு கணக்கு கேட்கிறது.இந்திய அரசில் பதியபட் டுள்ள நிறுவனங்கள் இந்திய அரசின் ஆய்வுக்கு உட்படுத்தபடுவது சட்டத்தின் துணையி னால் தானே யொழிய சர்வாதிகாரத்தினால் அல்ல

இப்படி சட்டப்படி கணக்கு கேட்ட மத்திய அரசுக்கு சரியா ன கணக்கு சொல்லாத நிறுவனங்களின் உரிமை யை ரத்து செய்வத ற்கு மத்திய அரசுக்கு உரிமையுள்ளதால் டீஸ்டாவின் என்ஜிஓக்களுக்கு சீல் வைத்து விட்டார் கள். வெளிநாடுகளில் இருந்து வருகிற பணத்திணை இவர்கள் கிராம மக்கள்களுக்கு கக்கூஸ் கட்டிகொடுத்
தோம்,கம்யூட்டர் சொல்லி கொடுத்தோம் என்றுநிர்வாக ரீதியாக கணக்கு காட்டி விட்டு மதமாற்றத்தில் ஈடுபடு வது தான் நிறைய என்ஜிஓக்களின் வேலை.

அப்படி நிர்வாக கணக்கு காட்டும் பொழுது வெளிநாடு களில்இருந்து வரும் பணத்தினில் 50% பணத்தினை செலவு செய்யும் பொழுது மத்திய அரசிடம் அதாவது உள்துறைஅமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டியது என்ஜிஓக்க ளுக்கு உள்ள சட்ட விதியாகும்.ஆனால் டீஸ்டாவின்என்ஜிக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்த பணத்தினில் 65% மேல்மத்திய அரசின் அனுமதியின்றி நிர்வாக செலவு செய்துள்ளதால் அவர்களின் லைசென் சை ரத்து செய்து ள்ளது மத்திய அரசு.

இது தேசவிரோத கும்பல்களின் செயல்பாட்டுக்கு மத்திய அரசு வைத்துள்ள செக் என்றே சொல்லலாம்.இதற்க்காக
மத்திய அரசை இரு கை தட்டி பாராட்டுவோம்-

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...