சுவாதி படுகொலை இதுவும் கடந்து போகும்

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு கொடுரனால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையை மட்டும்மல்ல தமிழகத்தையே உலுக்கியுள்ளது என்று கூறலாம்.

 

கடந்த 5ந்து வருடத்தில் மட்டும் தமிழகத்தில் 10400 படுகொலைகள் நடந்துள்ளன. சென்னை மாநகரில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 16 படு கொலைகள் நடந்துள்ளன. அதில் வழக்கறிஞர்கள் 3 பெரும் சமூக ஆர்வலர்கள் ஒருவரும் அடக்கம். ஆக மொத்தத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கமும், அதிக படுகொலைகள் நடைபெறும் இடமுமாகவும் சென்னை மாறிவிட்டது என்று வெட்கம் கெட்டு வேண்டுமானால் நாம் பெருமை பேசலாம்.

 

ஒரு காலத்தில் யாரும் இல்லாத வீட்டில் ஒலிந்து மறைந்து திருடிய காலம் போய், இன்று பட்டப் பகலில் நேராக வீட்டுக்குள் புகுந்து அனைவரையும் கட்டிப்போட்டு வீட்டைமட்டும் விட்டுவிட்டு அனைத்தையும் அள்ளிச்செல்லும் காலமாகிவிட்டது, சாலையில் பலபேர் முன்னிலையில் சங்கிலியை அறுத்துச்செல்லும் காலமாகிவிட்டது. அதேபோன்று ஆல் ஆரவாரம் இல்லாத பகுதியாக பார்த்து கொலையில் ஈடுபட்டு வந்த கூலிப்படையினர். இன்று பல நூர்பேர் முன்னிலையில் வெட்டி வீழ்த்திவிட்டு தைரியமாக தப்பிச் செல்லும் காலமுமாகிவிட்டது.

 

இது எதைக் குறிக்கிறது கொலை கொள்ளையர்கள் தைரியசாலி ஆகிவிட்டார்கள் என்பதையா?, காவல்துறையினர் இலஞ்சம் வாங்குவதில் மட்டுமே தைரிய சாலியாக இருக்கிறார்கள் என்பதையா?  இந்த சமூகம் சமூக ஊடகத்தில் மட்டுமே தனது தைரியத்தை காட்டும் என்பதையா?. ஆனால் முத்தான இந்த மூன்றும் உண்மை என்பதையே சுவாதி படுகொலை காட்டுகிறது.

 

இரயில் நிலையத்தில் பலநூறு பேர் மத்தியில் அவரை அரிவாளால் வெட்டி, சாவகாசமாக அவரது முகத்தை சிதைத்து எந்த ஆர்ப்பரிப்பும் இன்றி கொலைக்காரன் தப்பிச் சென்றுள்ளான். அங்கு அருகில் நின்றிருந்தவர்கள் தங்கள் அருகில் கிடந்த கற்களை தூக்கி வீசியிருந்தாலே கொலையை தடுத்திருக்கலாம், அல்லது அவனைப் பலவீனப்படுத்தி பிடித்திருக்கலாம். ஆனால் அங்கு அனைவரும் ஓட்டத்தைத்தான் பிடித்திருக்கிறார்கள்.

 

அங்கு சமூக அக்கறையின்மையும், சுயநலமும் நிறைந்த சமூகத்தைதான் நம்மால் காண முடிகிறது. காக்கையோ!, குரங்கோ!! தன் சக ஜீவராசிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் கொக்கரிக்கும், குறைந்தளவு எதிர்ப்பையாவது காட்டும். நூறாண்டுகள் பல கடந்தபின்பும் 5 ந்து அறிவு படைத்த அந்த ஜீவராசிகள் தங்கள் பண்பிலிருந்து மாறவில்லை. ஆனால் ஆறறிவு படைத்த நாம் நம் உன்னத பண்பாட்டிலிருந்து, கலாச்சாரத்தில் இருந்து மாறிவிட்டோம். இதனால் நாம் மனிதாபிமானங்களை, சமூக கடமைகளை இழந்து விட்டோம்,

 

இல்லை என்றால் பலாயிரம் படுகொலைகள் நடந்த போதும் ஆட்சியாளர்களையும், அவர்களது பெறுப்பற்ற ஆட்சியையும் நாம் தொடர்ந்து அமோதித்து இருப்போமா?.  எனவே சுவாதி படுகொலை இதுவும் கடந்து போகும் போகும் என்று கூறுவதை விட வேறு வழியில்லை.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...