மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றியது தென் ஆப்பிரிக்கா தான்

பிரதமர் நரேந்திரமோடி, ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கான 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனது சுற்றுப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக மோடி தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அங்கு தென்னாப்பிரிக்கா அதிபர் ஜேக்கப்ஸுமா, துணை அதிபர் சிரில் ரமபோஸா ஆகியோரை சந்தித்துப்பேசினார்.

இதனைதொடர்ந்து தென் ஆப்பிரிக்காவாழ் இந்தியர்களை மோடி சந்தித்து பேசினார். அதன் விவரம்:

தென்னாப்பிரிக்காவின் பலபகுதிகளில் இருந்து வந்துள்ள உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறவெறி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டாலும் கலை கலாச்சாரத்தை முன்னோர்கள் பாதுகாது வந்தனர்

உலக பொருளாதாரத்தில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக திகழ்கிறது. இந்தியமக்கள் அனைவரும் நேர்மையான சிந்தனையுடன் செயல் படுகிறோம். வரும் ஆண்டுகளில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளோம்

தென் ஆப்பிரிக்காவில் இருப்பதை நினைத்து பெருமைகொள்கிறேன். 1.25 பில்லியன் இந்தியர்களின் சார்பாக நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

நாம் வெவ்வேறு இடங்களில் வசித்துவந்தாலும், நம்முடைய முன்னோர்கள் தனித்துநின்று வந்துள்ளனர். நம்முடைய பொதுவான பாரம்பரியம் நம்முடைய இதயத்தையும், மூலையையும் பிணைப்பில் வைத்துள்ளது.

உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது, உங்களது முன்னோர்களையும் அவர்களது போராட்டத்தை நினைவுகூர்கிறேன். அவர்களது தைரியத்தையும் நினைவு கூர்கிறேன்.

1991-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன் பிறகு தனது போட்டியை அந்த அணி இந்தியாவில்தான் விளையாடியது.

நிறவெறி கடைபிடிக்கப்பட்ட காலத்தில் இந்தியா தென்ஆப்பிரிக்காவை புறக்கணித்திருக்கிறது. பின்னர் அவர்களை அன்புடன் வரவேற்றது.

இந்தி, தமிழ், குஜராத், உருது மற்றும் தெலுங்கு ஆகியமொழிகள் தென் ஆப்பிரிக்கா சமுதாயத்தில் தொடர்ந்து வளப்படுத்தப்பட்டுள்ளது.

காந்தியடிகள் தன்னுடைய அரசியல் கருத்தாக்கத்தை இங்கிருந்துதான் தொடங்கினார். சத்தியாகிரத்தின் பிறப்பிடம் இதுதான். மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றியது தென் ஆப்பிரிக்காவில் தான்.

இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...