துருக்கியில் ராணுவம் ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு பெரும்கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் நடத்திய போராட்டம், வன்முறையால் இது வரை 42 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 17பேர் போலீசார் எனவும், மற்றவர்கள் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்காராவில் பார்லி., கட்டிடம் அருகே இரண்டு இடங்களில் வெடிகுண்டுதாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் அதிகரித்துவருவதால் துருக்கியில் உள்ள முக்கிய விமான நிலையமான இஸ்தான்புல்விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
துருக்கியில் சர்வதேசளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுபோட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில்இருந்து 20 தமிழக மாணவர்கள் உள்பட 200 இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டுகிராமத்தில் வீரர் வீராங்கனைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துருக்கியில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு தூதரகம்மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது. இந்தியர்கள் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்து, வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் வரும்வரை இந்தியர்கள் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
துருக்கி அவசர நிலை காரணமாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் உதவிக்கு அங்காரா: +905303142203, இஸ்தான்புல்: +905305671095 ஆகிய எண்களில் அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.