நாட்டை பிளவுபடுத்துவதற்காக துப்பாக்கியை கையில் ஏந்துபவர்கள் தீவிரவாதிகள் தான்

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான்வானியும், அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் 8-ம் தேதி சுட்டுக் கொல்லப் பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், நீண்டமவுனத்திற்கு பின் அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி என்கவுண்டர் நடந்த இடத்தில் பர்கான்வானி இருந்தது பாதுகாப்பு படையினருக்கு தெரியாது என சர்ச்சைக்குரியவகையில் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடியாக காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் சாத்சர்மா தெரிவித்தவை பின்வருமாறு:-

பயங்கரவாதி பர்கான்வானி கொல்லப்பட்டதை வெற்றியாகவே கருதுகிறோம். என்கவுண்டர் நடந்த இடத்தில் பர்கான் வானி பதுங்கி யிருந்தது பாதுகாப்பு படையினருக்கு ஏற்கனவேதெரியும். எவ்வித தகவலும் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செயல்படமாட்டார்கள். இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக துப்பாக்கியை கையில் ஏந்துபவர்கள் தீவிரவாதிகள் தான். அவர்கள் கொல்லப்படவேண்டும். இதன் அடிப்படையிலேயே பாதுகாப்புபடை வீரர்கள் செயல்பட்டுள்ளனர்.

இந்த நாட்டை பிளவுபடுத்த விரும்பிய ஒருதீவிரவாதியை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். காஷ்மீர் பா.ஜ.க.வின் தலைவராக என்னை பொறுத்தவரையில் நான் கூற விரும்புவது என்னவென்றால், தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த ஒருதீவிரவாதியை என்கவுண்டரில் கொன்றது நமது பாதுகாப்பு படையினரின் வெற்றியாகும். இதில், தீவிரவாதி பதுங்கியிருந்தது பாதுகாப்பு படையினருக்கு முன் கூட்டியே தெரிந்திருந்ததா? தெரியாமல் இருந்ததா? என்று விவாதிப்பதே தேவையில்லாத ஒன்று இவ்வாறு காஷ்மீர் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...