காங்கிரஸும் காஷ்மீர் விவகாரமும்!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ஒரு நாள் முழுவதும், ஏறக்குறைய ஏழு மணி நேரம் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்ற நேரத்தைக் காட்டிலும், ஆளும் கட்சியைக் குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தப்பட்டது என்பதே உண்மை. இந்த விவகாரத்தில் அரசியல் கூடாது என்று சொல்லிக்கொண்டே அரசியல் பேசுகிற விவாதமாகவே இது முடிந்தது.

நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாகவே பிரதமர் நரேந்திர மோடி தனது நிலையைத் தெளிவாக உணர்த்தினார். மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு மனிதநேயம், ஜனநாயகம், காஷ்மீரியம் (காஷ்மீர் மக்களின் கலாசார மதிப்பீடுகள்) வழியாக பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்தார். நல்லிணக்கம் நீடிக்க வேண்டும். உலகின் சொர்க்கமாக காஷ்மீர் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் எதிர்க்கட்சிகள், குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய குலாம் நபி ஆசாத் முழுக்க முழுக்க பிரதமரையும் ஆளும் கட்சியையும் குறை கூறுவதற்கே தனது நேரத்தை செலவழித்தார். அந்த மண்ணின் மைந்தர் அவர். உண்மையான பிரச்னையை பேசியிருக்க வாய்ப்புகள் இருந்தும், இந்த நிலைமைக்குக் காரணம் பிடிபி-பாஜக கூட்டணி அரசு காஷ்மீரில் அமைந்ததுதான் என்கிற ரீதியில்தான் அவரது பேச்சு அமைந்தது.

இதே நேரத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்கும், கண்காணிக்கும் அமைப்பாகிய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) காஷ்மீரில் ஜூலை 25ம் தேதி கைது செய்யப்பட்ட பகதூர் அலி என்பவர் அளிக்கும் வாக்குமூலத்தின் நேரடி விடியோ காட்சியை பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளது. இந்த விடியோ காட்சியில், தற்போது நடைபெறும் அனைத்துக் கலவரங்களையும் லஷ்கர்-ஏ-தொய்பா தூண்டி விட்டதற்கான ஆதாரங்களை பகதூர் அலி குறிப்பிடுகிறார். இதுபோன்று விசாரணை குறித்த விடியோ பதிவுகளை என்.ஐ.ஏ. யாருடனும் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் தற்போது அரசுக்கு எதிராக தொடுக்கப்படும் விமர்சனங்களின் காரணமாக இதைச் செய்ய நேர்ந்துள்ளது.

இதை எதிர்க்கட்சிகள் குறைகூறக்கூடும். சிபிஐ அமைப்பை தங்களுக்குக் கீழாக வேலை செய்யும் அமைப்பாக ஆளும்கட்சி மாற்றியிருக்கிறது என்று குற்றம் சொல்லும் எதிர்க்கட்சிகள், இந்த என்.ஐ.ஏ. ஆதாரத்தை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்றும் குறை கூறும். இந்த ஆதாரத்தை ஏன் வெளிப்படையாகப் பொதுவெளிக்கு அரசு பகிர வேண்டும் என்றும் இது உள்நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகளும் நரேந்திர மோடி அரசை விமர்சிப்பவர்களும் குறைக் கூற கூடும்.

ஆனால் இந்த விடியோ ஆதாரத்துக்கு முன்பாக வெளியான பாகிஸ்தான் ஊடகத் தகவல்களும்கூட இந்தக் கலவரத்துக்கு லஷ்கர் அமைப்பை குற்றம் சாட்டியிருந்தன. இது குறித்த செய்திகள்

இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியாகின. அதனடிப்படையில் பார்க்கும்போது இந்த விடியோ பதிவில் குற்றம் காண வேண்டிய அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும், தொடர்ந்து இதை ஆளும் கட்சியின் தவறான அணுகுமுறையாக பார்ப்பது சரியான அரசியல் அல்ல. பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கம் இந்த விவாதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

காஷ்மீரில் உள்ள சில இளைஞர்களை பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் சில பயங்கரவாத அமைப்புகள் தூண்டிவிட்டுத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். இது தொடர்பான சில விளக்கங்களையும் அவையில் தெரிவித்துள்ளார். அண்மையில் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் சென்று, சார்க் மாநாட்டில் பேசியபோது தனக்கு நேரிட்ட அலட்சியப்படுத்தலைப் பற்றிக்கூட அவர் இந்த அவையில் பெரிதுபடுத்தவில்லை. முழுக்க முழுக்கக் காஷ்மீர் விவகாரத்தை மட்டுமே பேசினார்.

இந்தக் கலவரத்தில் "பெல்லட் கன்' பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதையும், ராணுவத்தினர் இந்த இளைஞர்கள் மீது மென்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ராணுவத்தையும் காவலர்களையும் தாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தாக்குதல் நடத்துவோர் மீது எவ்வாறு மென்மையான நடவடிக்கை எடுக்க முடியும்? கடந்த 33 நாள்களாக நடந்துவரும் கலவரத்தில் ராணுவத்தினரும் காவல்துறையினரும் சேர்த்து மொத்தம் 4,500 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் எவ்வாறு மென்மையாக நடந்துகொள்வார்கள் என்று புரியவில்லை.

இந்த விவகாரம் முழுக்க முழுக்க பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளின் சதி என்பதையும், பின்னணியில் உள்ளவர்கள் பிரிவினைவாதிகள் என்பதையும், இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மட்டுமே இவர்களது நோக்கம் என்பதையும் காஷ்மீருக்கு வெளியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வேற்றுமை இல்லாமல் ஒப்புக்கொண்டாலொழிய, காஷ்மீர் பிரச்னை குறித்த விவாதம் நேர்மையானதாக இருக்காது.

அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை அரசியலாக மட்டுமே பார்க்கிறார்கள். காஷ்மீர் விவகாரத்தில் வேறு நாடுகளின் தலையீடு கூடாது என்று அம்மாநில முதல்வர் மெகபூபாவே மறைமுகமாக பாகிஸ்தானைக் கண்டித்தாலும்கூட, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை நரேந்திர மோடிக்கு எதிரான ஆயுதமாகவே கருதுகிறார்கள். இந்த நிலைப்பாட்டால் காஷ்மீரின் பிரச்னை தீராது என்பது மட்டுமல்ல. பாகிஸ்தானால் திசை திருப்பப்படவும் கூடும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தால் அவர்களது நிலைப்பாடு இப்படி இருந்திருக்குமா?

நன்றி தினமணி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...