பலுசிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிய மோடிக்கு ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்கள் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு முழுஉரிமையுள்ளது எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமைமீறல் குறித்து கேள்வி எழுப்பினார். பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்துதெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் கூறியபோது, “பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கனை பற்றியும், இந்தியாவை பற்றியும் வெளிப்படையாக கருத்துதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி பலுசிஸ்தான் பற்றி கருத்துதெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பலுசிஸ்தான் விவகாரம்குறித்து பேசியதால்தான் அந்தமக்கள் மீது பாகிஸ்தான் செலுத்தும் அடக்கு முறைகள் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் ராணுவ உதவிபற்றி அமெரிக்கா ஆதரவு அளித்தால் அதை வரவேற்கிறோம். ஆதரவு அளிக்க வில்லை என்றால் யாருடைய அனுமதிக்காகவும் இந்தியா காத்திருக்க தேவையில்லை. இந்திய தனது பிராந்திய நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறது” என்றார். மேலும் கடந்தகாலங்களில் அமெரிக்க பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவைப் பற்றியும் குற்றச்சாட்டினார். முன்னதாக இந்தவாரம் இந்தியா வந்த வங்கதேச அமைச்சர் ஹசானுல் ஹயு இனுவும் பலுசிஸ்தான் குறித்த மோடியின் பேச்சுக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.