பாகிஸ்தான் கூறுவதை கேட்க உலகம் தயாரில்லை

காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுகிறவர் களுடன் சமசரம்கிடையாது காஷ்மீர் நிலவரம், கவலை அளிக்கக் கூடிய வகையில் உள்ளது. 1947–ம் ஆண்டு பிரிவினையை தொடர்ந்து, போர்கள் நடத்தி, வன்முறையை தூண்டிவிட்டு, காஷ்மீரை பறிக்கமுயன்று பாகிஸ்தான் தோல்வி கண்டது. இந்த நிலையில், அந்த நாடு இந்தியாவின் ஒருமைப்பாட்டின்மீது புதியவழியில் தாக்குதல் நடத்தி வருகிறது.

காஷ்மீரைப் பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திரமோடி 3 முன்னுரிமைகளை கொண்டுள்ளார்.ஒன்று, நாட்டின் பாதுகாப்பிலும், ஒருமைப் பாட்டிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வன்முறையில் ஈடுபடுகிறவர்களுடன் சமரசம்கிடையாது.

இரண்டு, காஷ்மீர் வன்முறைகளையும், போர்களையும் சந்தித்துவந்துள்ளது. காஷ்மீருக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் தேசியமாநாட்டு கட்சி ஆட்சிகளில் அது மறுக்கப்பட்டுள்ளது.

மூன்று, ஜம்மு, பாரதீய ஜனதாவின் அடிப்படை ஆதரவுதளமாக அமைந்துள்ளதால், கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

இப்போது நிலைமை மோசமாக உள்ளது. பாகிஸ்தான், பிரிவினை வாதிகள், மத அமைப்புகள் கை கோர்த்துள்ளன. புதியவழியில், இந்தியாவின் ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.இது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

பிரிவினை வாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் காஷ்மீர்மக்கள், நாட்டுடன் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். அப்போதுதான் புதியவியூகத்தில் வந்துள்ள பாகிஸ்தானின் திட்டம், இந்த முறையும் தோற்கடிக்கப்படும்.

பாகிஸ்தான் 2 முறை போரில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரை போரின் மூலம் இந்தியாவிடம் இருந்து பறிக்க முடியாது என தெரிந்துகொண்டு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சிஅளித்து இந்தியாவினுள் திணிக்கத்தொடங்கியது. ஆனால் அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் புதியதிட்டத்தை கையில் எடுத்தது. 2008–ம் ஆண்டு ஜம்முவில் அமர்நாத் போராட்டம் தொடங்கியபோது, அவர்கள் கல்வீச்சை ஆரம்பித்தனர்.

பள்ளிக்கு செல்கிற குழந்தைகளுக்கு பைகளில் புத்தகங்களை தந்து அனுப்புவதற்கு பதிலாக, போலீசாரையும், பாதுகாப்பு படையினரையும் தாக்குவதற்காக கற்களைவைத்து அனுப்புகிறார்கள். ஆனால் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு, கைதாகிற கல்வீச்சாளர்கள் மட்டுமேதெரிகிறது. கல்வீச்சில் காயம் அடைந்து, ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆயிரக்கணக்கான போலீசாரையும், பாதுகாப்பு படையினரையும் தெரியவில்லை.

வரலாற்றை நீங்கள்பார்த்தால், பிரிவினைக்கு பின்னர் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பாகிஸ்தான் ஒருபோதும் அங்கீகரித்ததுஇல்லை என்பதை அறிவீர்கள். பிரிவினை நடந்தநாளிலேயே, இந்தியா நேர்மறை திட்டங்களை கையில் எடுத்தது. வறுமை ஒழிப்பு, மக்களின்வாழ்வாதார மேம்பாடு, கல்வியில் இந்தியா ஆர்வம் செலுத்தியது.

எத்தனையோ பிரச்சினைகள்வந்தன. நாம் அவற்றுக்கு எதிராக போராடினோம். அவற்றில் இருந்து வெளியேவந்தோம். இன்றைக்கு இந்தியா, உலகிலேயே பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்துவருகிற நாடாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அப்படி இல்லை. பாகிஸ்தானிடம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம்இல்லை. உண்மையான விஷயங்களில் இருந்து மக்களை திசைதிருப்பி காஷ்மீரிலும், இந்தியாவிலும் கோஷமழை பெய்ய செய்கிறது. போரில் தோல்விகள் கண்ட நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கூறுவதைகேட்க உலகம் தயாரில்லை இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி அருண் ஜெட்லி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...