அரசியல் ஆதாயத்துக்காக தேவை யில்லாத சர்ச்சைகளை காங்கிரஸ் உருவாக்கிவருவதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் வெறுப்பூட்டும் கொள்கைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்துபோராடும். வாக்குவங்கி, பிரித்தாளும் அரசியலில் இத்தனை ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த காங்கிரஸுக்கு, பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக குற்றம் சாட்ட எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்புகுறித்து சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தெரிவித்தார்.
இது அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லா சர்ச்சைகளை எழுப்ப முயலுவதையே காட்டுகிறது. காங்கிரஸ்கட்சி எப்போதும் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கையும், தேசியவா திகளிடம் கடுமையையும் காட்டிவருகிறது.
தேசத்தில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு போதும் அக்கட்சி முயற்சிசெய்ததில்லை. மாறாக, "பிரிவினையை உருவாக்குவது; பின்னர் தீர்த்து வைப்பது' என்ற கொள்கையை மட்டுமே அக்கட்சி கடைபிடித்துவருகிறது.
மாவோயிஸ்டுகள், அடிப்படைவாதிகள் போன்ற தேசத்துக்கு எதிராக செயல்படு பவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்றார் வெங்கய்யநாயுடு.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.