காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் தண்ணீர் தரமறுத்து அங்குள்ள பொது மக்களை போராட்டத்திற்கு தூண்டி விட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காதபோது அதற்கு அடுத்தபடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தமிழக அரசு தெளிவாக திட்டமிட வேண்டும்.
அதற்கான அறிவிப்பையோ சர்வகட்சி கூட்டத்தையோ நடத்தியிருக்கவேண்டும். அல்லது விவசாய சங்கங்களை
கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித் திருக்க வேண்டும். அனைத்துகட்சி கூட்டத்தை நடத்தினால் அதில் பா.ஜ.க பங்கேற்கும். தமிழக அரசு உரிமையை நிலை நாட்ட வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியது சரியானது.
ஒரு அரசாங்கமே நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படமாட்டேன் என சொல்லும்போது பொது மக்களிடம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எப்படி நாம் எதிர்பார்க்கமுடியும்.
தமிழக அரசு தண்ணீர்போதாது என்றும், இன்னும் அதிகமாக வேண்டும் என கோரவேண்டும். கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது ஒரு அபாயகரமான சூழ்நிலையாகும். கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.