தேவபாஷையில் ஐநாவின் சாசனம்-

ஒரு நாட்டின் தொன்மையான மொழியை அந்த நாட்டு மக்களே கற்கக்கூடாது என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு
இருக்கும் கூட்டங்கள் இருக்கும் இந்தியாவில் வேண்டுமா னால் சமஸ்கிரதத்தின் மேன்மை அறியப்படாமல் இருக்கலாம்.ஆனால் உலக நாடுகளை வழி நடத்தும் ஐநா சபையில் சமஸ்கிரதத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் விளைவினால் உண்டான ஞானத்தினால் 1945ம் ஆண்டில் அக்டோபர் மாதம் 24ம் தேதியில் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் , உலக நாடுகளின் மாநாடு'நடைபெற்றது. அதில், ஐ.நா., அமைப்பை உருவாக்குவதற்காக சர்வதேச நாடுகளிடை யே ஏற்பட்ட ஒப்பந்தம், சாசனமாக இயற்றப்பட்டது. இந்த சாசனம் இதுவரை ஐ.நா.,வின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சம்ஸ்கிருதத்திலும் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது அரபி,சைனீஸ்,ஆங்கிலம் ,பிரெஞ்சு,ஸ்பானிஸ், ரஷ்யன். என்று ஆறு உலக மொழிகளில் உள்ள ஐநா
சபையின் அரசியல் சாசனம் தற்பொழுது ஏழாவதாக சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்க்கபட்டு உலகளவில்
இந்தியாவின் தெவபாஷைக்கு அங்கீகாரம் கிடைத்து ள்ள து.சம்யக் + க்ருதம் = சம்ஸ்க்ருதம், நன்கு செய்யப் பட்டது, Perfected என்று பொருள்.ஆகவே இனிதான் ஐநாவின் சாசனம் Perfect ட்டாக செயல்பட துவங்கும்.

இந்தியாவில் இன்றும் சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்றே உணர்த்தப்பட்டு வருகிறது.சமஸ்கிருத
த்தில் புலமைபெற்ற கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ பிராமணர்கள் அல்ல காளிதாசன் இடைக்குல த்தைச் சேர்ந்தவர். வால்மீகி ஒரு திருடராக இருந்தவர். வேதங்களை அருளிய வியாசர் பரத குலத்தில் பிறந்தவர் அதனால் சமஸ்க்ருதம் ஒரு சாராருக்கு மட்டும் சொந்த மானது என்ற கூற்று தவறு. பழைய காலத்தில் அப்படி இருந்ததும் இல்லை.

ஆங்கில முறைக் கல்வி வருவதற்கு முன் ஒவ்வொரு கிராமத்திலும், சிற்றூரிலும் குருகுலக் பள்ளிக் கூடங்கள் இருந்தன. சமஸ்கிருதம் அனைத்து மக்க்களிடமும் கொண்டு செல்லப்பட்டது.இந்தியாவின் பாரம்பரியத்தை ஒழிக்க திட்டம்போட்ட ஆங்கிலேயர் திராவிட ஆரிய கதைகளை புகுத்தி இந்தியாவில் இனப்பிரிவினையை உருவாக்கி விட்டார்கள்

மெக்காலே புகுத்திய இந்திய கல்விமுறையினால் நாம் நம்முடைய மொழிகளை இழந்துவிட்டோம்.அதாவது.
கண்ணிருந்தும் குருடர்கள்போல இருக்கிறோம்.ஆனால் மத்தியில் பிஜேபி ஆட்சி இருக்கும்வரை நம்முடைய பார்வை கோளாறை சர் செய்யும் நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கும்.அதன் ஒரு நிகழ்வுதான் ஐநா சபையில் சமஸ்கிருதத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம். அடுத்து நம்முடைய புதியகல்விக்கொள்கையிலும் இது
எதிரோளிக்கும்

இந்தி, வங்காளி, குஜராத்தி, மராட்டி, காஸ்மீரி, அரியான் வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சா பி, உருது போன்ற மொழிகளின் மூலமான சமஸ் கிருதத் தி ன் வழியாக ஐநா சபையின் சாசனத்தைவெளியிட செய்தலக்னோவில் உள்ள அகில பாரதிய சமஸ்கிருத பரிஷித் செயலாளரான ஜிதேந்திர குமார் திரிபாதிக்கும்
ஐநா சபையினில் உள்ள இந்திய தூதர் செய்யது அக்பரு தின் அவர்களுக்கும் தலைவணங்கி பாராட்டுக்கள்….

நன்றி விஜயகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...