இந்தியாவின் பால்உற்பத்தி உலகிலேயே மிகஅதிகம் எனவும், இது அரிசி, கோதுமை வருவாயை மிஞ்சிவிட்டது எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், தியோதர் என்ற இடத்தில்.
உள்ள பனாஸ் பால் பண்ணையில் புதியவளாகம் மற்றும் உருளை பதப்படுத்துதல் தொழிற் சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் பால்உற்பத்தியின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடியாக உள்ளது. இது அரிசிமற்றும் கோதுமையின் வருவாயைவிட அதிகம். இதனால் பால் துறையில் சிறுவிவசாயிகள் அதிக அளவில் பயனடைகின்றனர்.
இன்று, பால் அதிகளவில் உற்பத்திசெய்யும் நாடாக இந்தியா உள்ளது. இதில் கோடிக்கணக்கான சிறுவிவசாயிகளின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா பால் உற்பத்தி செய்தாலும், மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் உட்பட பலர் இதில்கவனம் செலுத்துவதில்லை. கோதுமை, அரிசி மூலம் கிடைக்கும் வருவாய் கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு நிகராக இல்லை. பால்துறையில் மிகப்பெரிய பலன் அடைபவர்கள் சிறு விவசாயிகள்.
இவர்களின் மேம்பாட்டுக்காகவும், கிராமபொருளதாரத்தை ஊக்குவிக்கவும் புதிய பால் வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார். இதோடு பனாஸ் சமுதாய வானொலி நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், பாலாடை பொருட்கள் தயாரிப்பு, பால்பவுடர் தயாரிப்பு வசதிகளையும் பிரதமர் விரிவுபடுத்தினார். தமாபகுதியில் ஆர்கானிக் உரம் மற்றும் பயோ காஸ் ஆலையும் தொடங்கிவைக்கப்பட்டது.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |