பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருமாதத்துக்கு நடைபெறுகிறது

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் (நவம்பர்) 16–ந்தேதி தொடங்கி ஒருமாதத்துக்கு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நடத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப் பட்டது. மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி மாத இறுதிநாளுக்கு பதிலாக, பிப்ரவரி 1–ந் தேதியே தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல்செய்யப்படாமல், அடுத்த ஆண்டு முதல், மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்தே தாக்கல்செய்யப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து மத்திய நிதிமந்திரி துறைவாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதுவழக்கம். தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளிடமும் அவர் கருத்துபரிமாற்றம் செய்வார்.

மேலும், சரக்கு ,சேவை வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதியிலிருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுதொடர்பான மசோதாவை மாநில சட்ட சபைகள் நிறைவேற்றி விட்டதால், மசோதாவின் இறுதிவடிவத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

எனவே பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடர் சற்று முன்கூட்டியே தொடங்குகிறது. பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரி சபையின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

அதில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 16–ந் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யப்பட்டது. டிசம்பர் 16–ந் தேதி வரை, ஒருமாத காலத்துக்கு குளிர்கால
கூட்டத்தொடர் நடைபெறும்.மேலும்  குளிர்கால கூட்டத்தொடரில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மத்திய சரக்கு மற்றும் சேவைவரி மசோதா, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைவரி மசோதா ஆகியவையும் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட உள்ளன. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான போருக்குபிறகு அந்த நாடுகளுக்கு இடம்பெயர்ந் தவர்கள், இந்தியாவில் விட்டுச் சென்ற சொத்துகளை நிர்வகிக்க ‘எதிரிசொத்து சட்டம்’ தொடர்பான அவசரசட்டம் 4–வது தடவையாக பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

எனவே, அதை சட்டமாக்கு வதற்கான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...