மக்களவையில் வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து, மக்களவை தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என மத்திய விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜூலை 22, 2024 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |