#சன்நியூஸே இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அப்படி என்றால் சன் நியூஸ்
சொல்ல வருவது என்ன? என்று
புரிந்து கொள்ள முடிகிறதா?….
#TIMETRAVEL | பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் 28 ஆண்டுகளுக்கு முன்பே (1994) அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதாவிற்கு அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி ஒப்புதல் அளிக்கவில்லை!
➡️ 1994ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அப்போதைய கல்வித்துறை அமைச்சர் பொன்னுசாமி இந்த மசோதாவை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.
➡️ சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலைக் கழகத்துக்கென தனியாக ஒரு சட்ட மசோதாவும், மற்ற 11 பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தும் வகையில் பொதுச்சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டன.
➡️ ஆளுநர் சென்னா ரெட்டிக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அப்போது சுமூக உறவு இல்லாத சூழ்நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்டாலும் மசோதாவுக்கு ஆளுநர் சென்னா ரெட்டி ஒப்புதல் அளிக்கவில்லை!
தற்போது இந்த செய்தியை சன் நியூஸ் நினைவுபடுத்தும் காரணம் என்ன?…
முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிய துணைவேந்தரை அரசேநியமனம் செய்யும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்க மாட்டார் என்று தெளிவுபடுத்தி செய்தியை வெளியிட்டுள்ளதா சன் நியூஸ்
நிறைவேற்ற முடியாத ஒன்றுக்கு தமிழக சட்ட சபையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து விட்டு வெறும் அரசியல் மட்டுமே திமுக அரசு செய்து கொண்டிருக்கும்…
தமிழக ஆளுநரை போஸ்ட் மேன் என்று விமர்சனம் செய்து ஆறுதல் அடையலாம்.
துணைவேந்தரை அரசேநியமனம் செய்யும் சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்க மாட்டார் என்பதற்கு ஒரு முன் உதாரணம் உள்ளதை நினைவுபடுத்தும் விதமாக செய்தி உள்ளது.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |