சமீபத்தில் IAS அதிகாரிகளை மத்திய அரசு பணியில் எடுத்துக்கொள்ளும் விதியான IAS பணி விதி எண் 6 (1 ) இல் மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு முனைந்து அதற்காக மாநில அரசுகளின் கருத்தை கேட்டுள்ளது.
இதற்கு பா ஜ க அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் குறிப்பாக மம்தா பானெர்ஜி போன்ற முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தி மு க வும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது…
பொதுவாக IAS IPS போன்ற பணிக்கான தேர்வை மத்திய அரசின் UPSC நடத்தி தேர்ந்தெடுக்கிறது. தேர்தெடுக்க பட்ட IAS IPS அதிகாரிகளை மாநிலங்களுக்கு பணி செய்ய பிரித்தனுப்புகிறது.
இந்த IAS IPS அதிகாரிகளை வருடந்தோறும் குறிப்பிட்ட
எண்ணிக்கையில் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசு பணிக்கு அனுப்பவேண்டும் என்பது விதி..எந்த அதிகாரி மத்திய அரசு பணிக்கு அழைப்பது அல்லது எடுத்து கொள்வது என்பதை மத்திய அரசும் சம்மந்த பட்ட மாநில அரசும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும்.
தற்போதய பிரச்சனை என்னவென்றால் பல மாநிலங்கள் தங்களிடம் பணிபுரியும் IAS மற்றும் IPS அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு போதிய அளவு அனுப்புவதில்லை…அதேநேரத்தில் தேர்ந்தெடுக்க பட்ட அந்த அதிகாரியையும் அனுப்புவதில் காலதாமதம் செய்கின்றன. இதனால் போதுமான IAS மற்றும் IPS அதிகாரிகள் மத்திய அரசு பணியில் இல்லை. இது குறித்து மாநில அரசுகளுக்கு பல முறை மத்திய அரசு கடிதம் எழுதியும் முடிவு எட்ட படவில்லை என்பதால் தான் இந்த IAS சேவை விதிகளில் மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2021 ஜனவரி வரை பார்த்தால் இந்தியாவில் 5200 IAS அதிகாரிகள் பணியில் இருக்கின்றார்கள். இதில் மத்திய அரசு பணியில் 458 IAS அதிகாரிகள் தான் உள்ளனர். Central Deputation Reserve என்று ஒன்று உண்டு . அதன் படி மாநிலங்கள் தங்கள் மாநிலத்திலிருந்து கட்டாயம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் IAS மற்றும் IPS அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும். IPS எடுத்துக்கொண்டாலும் கூட 645 IPS பணிகளுக்கான இடங்கள் மத்திய அரசில் உள்ளது ஆனால் தற்போது 390 IPS அதிகாரிகளே மத்திய அரசு பணியில் உள்ளனர்..மீதி இடங்கள் நிரப்ப படாமல் உள்ளது.
இந்த நிலையில் தான் மத்திய அரசு IAS சேவை விதிகளில் சில மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
சரி மாநில அரசுகள் எதிர்த்தால் இந்த விதிகளில் மாற்றத்தை கொண்டுவர முடியுமா ..நாடாளுமன்றத்தில் இந்த விதிமாற்றத்தை நங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றெல்லாம் சில தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர்..
ஒன்றை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்டம் இயற்றுவது என்பது நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் உள்ள அதிகாரம். சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் நாடாளுமன்ற சட்ட மன்ற ஒப்புதல் பெற வேண்டும்.ஆனால் ஒரு சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதற்கான விதிகள் அரசால் தான் உருவாக்க படுகிறது. இதற்கு subordinate legislation என்று பெயர். ஆகவே விதிகளில் மாற்றத்தை கொண்டுவர நாடாளுமற்ற ஒப்புதல் பெற தேவை இல்லை. ஆனால் ஒரு சட்டத்திற்கான விதிகளை உருவாக்கிய பிறகு 30 நாட்கள் அதை நாடாளுமன்ற இரு அவைகளிலும் வைக்க வேண்டும்.
இதில் Negative resolution and Affirmative resolution என்று இரண்டு வகை உண்டு. நெகடிவ் resoluion என்றால் அரசால் உருவாக்க பட்ட விதிகளை நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்த உடன் அவை சட்டமாகி விடும். எந்த பாராளுமன்ற உறுப்பினராவது அதிலே மாற்றம் கொண்டுவர விரும்பினால் சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுக்கவேண்டும்…பொதுவாகவே நம்முடைய பாராளுமன்ற வரலாற்றில் negative resolution பெரிதாக விவாதிக்க படுவதில்லை..அதே போல Affirmative resolution என்று ஒன்று உள்ளது. இதன் படி ஒரு சட்டத்தில் அரசு விதிகளை ஏற்படுத்திய பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பின்னர் அவை நாடாளுமன்றம் ஏற்று கொண்டால் மட்டுமே சட்டமாகும்…பெரும்பாலும் நம் நாட்டில் Nagative resolution மட்டுமே பின்பற்ற படுகிறது.
அதேபோல இந்த suboridinate legislation செயல்பாடுகளை கவனிக்க இரண்டு அவைகளிலும் பாராளுமன்ற நிலை குழுக்கள் உள்ளன. இவைகள் அந்தந்த சட்டதிற்கான விதிமுறைகள் குறித்து வல்லுனர்களிடமும் பொது மக்களிடமும் கருத்துக்களை கேட்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை தரவேண்டும். நான் திரட்டிய தகவல்களிலிருந்து இதுவரை 2008 இலிருந்து 2012 வரை இயற்றப்பட்ட 6985 சட்டங்களுக்கான விதிகளில் 101 சட்டங்களுக்கான விதிகளையே இந்த நிலை குழுக்கள் பரிசீலித்திருக்கிறது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மாநில அரசுகள் மத்திய அரசு ஏற்படுத்தவிரும்பும் இந்த விதிகளில் மாற்றத்தை எதிர்த்தாலும் இந்த விதி மாற்றத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை இருக்காது. சட்ட படியே மத்திய அரசின் முடிவு நிறை வேற வாய்ப்பு அதிகம் உள்ளது.
நன்றி கே.டி ராகவன்
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |