பரம்பரையாக வரும் மரபு பண்புக்கு காரணமாக இருக்கும் உயிர்மத்தின் பெயர்தான் ‘மரபணு”. ஆங்கிலத்தில் இதை ஜீன் என்று அழைக்கிறார்கள்.
ஒரு குழந்தை பிறந்த உடன் அதை பார்ப்பவர்கள் ‘அப்பா மாதிரி மூக்கு, அம்மா மாதிரி காது” என்று சொல்லிக் கேட்டிருக்கலாம். இப்படி அப்பா மாதிரி, அம்மா மாதிரி, தாத்தா மாதிரி ஒரு குழந்தை பிறக்க காரணமாக இருப்பது
ஜீன (மரபணுக்)களே.
ஒரு உயிரினத்துக்கு (மனிதன் அல்லது விலங்கு அல்லது தாவர வகை) தேவையான புரதங்களை உருவாக்கும் தகவல்கள் பதிவு செய்யப் பட்டவை ஜீன் (மரபணுக்)கள் ஆகும். உயிரினம் எப்படி இருக்க வேண்டும். அதன் உடல் அமைப்பு, நிறம், உடலின் ரசாயன மாற்றங்கள் போன்ற தகவல்கள் பதிவானவைதான் ஜீன்கள். அந்த உயிரினத்தின் உணவு பழக்கவழக்கம், நோய் எதிர்ப்பு சக்தி, உடலை பாதிக்கும் நோய்கள் விவரம், அதன் மனநிலை, பழக்கவழக்கம் போன்றவை ஜீன்களில் பதிவாகி இருக்கும். பல கோடி ஜீன்கள் (மரபணுக்கள்) இணைந்து சங்கிலித் தொடர் போன்ற அமைப்பை உருவாக்குகின்றன.
You must be logged in to post a comment.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
3pocketbook