வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் நேற்று நடந்தவிழாவில் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (அனைவருக்கும் வீடு) திட் டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். அங்கு அவர் பேசியதாவது:
கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா விரைவுரயில் தடம்புரண்டு பலர் உயிர்பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. விபத்துகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைசெய்கிறேன்.
வரும் 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வீடுகளைக் கட்டிக்கொடுக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக ஏழைகளுக்கான ‘பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா’ வீட்டுவசதி திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தில் விவசாயிகள் முதல் பழங்குடியினர்வரை அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
பணக்காரர்கள் தங்களது கருப்புப்பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வதற்கு ஜன்தன் வங்கிக் கணக்குகளை வைத்திருப்போர் உதவக்கூடாது. அவ்வாறு உதவினால் அவர்கள் தேவையில்லாமல் சட்ட ரீதியிலான பிரச்னையில் சிக்க வேண்டியிருக்கும்.
கருப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் எந்தவகையான நபர்கள் எனக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர் என்பது எனக்குத்தெரியும். சீட்டு நிதிநிறுவன வர்த்தகத்தில் யாருடைய பணம் முதலீடு செய்யப் பட்டுள்ளது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாதா என்ன? சீட்டு நிதிநிறுவனங்களில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ஏழை மக்கள் பணத்தை முதலீடுசெய்துள்ளனர். ஆனால், அரசியல்வாதிகளின் ஆசியோடு கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போய்விட்டது.
சீட்டு நிறுவனத்தில் பணத்தை இழந்து நூற்றுக் கணக்கான குடும்பத் தலைவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே, சீட்டு நிதிமோசடிக்குப் பின்னணியில் இருந்தவர்களின் (மம்தா) வரலாற்றைப் பாருங்கள். அவர்கள்தான் தற்போது என்னைக் கேள்விகேட்கின்றனர்.
மத்தியில் கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் (காங்கிரஸ்) கருப்புப்பண விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்தனர். ஏனென்றால், அவர்கள் தங்களிடம் இருந்து ஆட்சி போய்விடுமோ என்ற கவலையிலேயே காலத்தைக்கழித்தனர்
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க பட்டிருப்பதால் பொதுமக்கள் சிலசிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனினும் உங்களின் தியாகம் வீண் போகாது. இன்னும் 50 நாட்களில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.
அரசின் நடவடிக்கையால் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாற உள்ளது. நிதிநிறுவன ஊழல் மூலம் ஏழைகளின் பணத்தை சுரண்டியவர்கள் இன்று எனக்கு எதிராக கைநீட்டுகிறார்கள்.
கறுப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர்தொடுத்துள்ளது. இதுவரை வங்கிகளில் ரூ.5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை சீராக 50 நாட்கள் ஆகும் என்று கூறி இருக்கிறேன். நான் கூறியவாறு 50 நாட்கள் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சீட்டு நிறுவனங்களை மக்கள் ஊக்குவிக்க வேண்டாம். .
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.