சுற்றுலா, வணிகவிசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் சிலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, மும்பை புறநகர் போக்குவரத்து 3வது கட்டதிட்டம் நிறைவேற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.8,679 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் நிறைவுபணியின் தொகை ரூ.10 ஆயிரத்து 947 கோடியாக இருக்கும் என்றும் திட்டமதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. 13வது ஐந்தாண்டு திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவுபெறும்.
இதேபோன்று இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சிலசமூகங்களை சேர்ப்பதற்கான திருத்தத்திற்கும் அனுமதி அளித்துள்ளது. அந்ததிட்டத்தின்படி, அசாம், பீகார், இமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சமூகங்களை சேர்ப்பது அல்லது அவற்றிற்கான திருத்தங்கள் மேற்கொள் வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த 36 ஆயிரத்து 384 குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம்கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. இடம் பெயர்ந்தோருக்கு சிறப்பு திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5.5 லட்சம் வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.