உலகசுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக மாறும் இந்தியா

இந்தியா உலகசுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலகசுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம் நகரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு உலகசுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமையிடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேசமையமாக திகழும்.

இந்தமையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயுஷ் மருத்துவ முறைகளை உலகம்முழுவதும் பரவச் செய்ய முடியும். அத்துடன் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான சர்வதேசசுகாதார விவகாரங்களில் இந்தியா தலைமை வகிக்கவும் வகைசெய்யும். தரமான, பாதுகாப்பான, நோய்களை குணப்படுத்தக்கூடிய அதிக திறன் கொண்ட மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் பாரம்பரிய மருந்துகளை முறையாக பயன் படுத்தவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகசுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை, குஜராத்தில் உள்ள ஆயுர்வேதபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அதன் இடைக்கால அலுவலகத்துடன் நிறுவுவதற்கான உலக சுகாதார நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இன்று ஆயுஷ்அமைச்சகம் கையெழுத்திட்டது.

இந்நிலையில், இந்தியா உலகசுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், அதிநவீன வசதிகளைக்கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையம், உலகநன்மைக்காக ஒரு ஆரோக்கியமான நல்வாழ்வு நடைமுறைகளை உருவாக்குவதற்கும், நமது பாரம்பரிய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று மோடி கூறியுள்ளார்.

உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை நடைமுறையில் உள்ளதாகவும், 80 சதவிகித மக்கள் பாரம்பரிய மருந்துகளையே பயன்படுத்தி வருவதாகவும் உலக சுகார அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...