இந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிகசெல்வாக்குடன் மோடி இருக்கிறார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து “போர்ப்ஸ்” எனும் மாதம் இருதடவை வெளியாகும் வணிக இதழ் உலகப்புகழ் பெற்றது. இந்த இதழ் அடிக்கடி உலகபணக்காரர்கள், உலகின் செல்வாக்குமிக்க வி.ஐ.பி.க்கள், உலகபிரபலங்கள், உலகின் தலை சிறந்த நகரங்கள் என்று பல்வேறு துறைகளில் ஆய்வுசெய்து பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியல்கள் உலகமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.அந்த வரிசையில் போர்ப்ஸ் இதழ் உலகில் அதிகாரம் மிக்க சக்திகொண்ட தலைவர்கள் பற்றிய ஆய்வை நடத்தியது.
அதில் உலகின் பல்வேறு நாட்டுதலைவர்கள் 74 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தபட்டியலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகின் சக்திமிக்க தலைவர்களில் புதின் 4-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்காவின் இப்போதைய அதிபர் பாரக் ஒபாமா இதில் 48-வது இடத்திற்கு வந்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மார்க்கலுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. சீன அதிபருக்கு 4-வது இடம், போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7-வது இடத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திரமோடி உலக அதிகாரம் மிக்கவர்கள் வரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிக செல்வாக்குடன் மோடி இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 38-வது இடத்தில் இருக்கிறார்.
பேஸ்புக் சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க் 10-வது இடத்தை பிடித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் ஹெலாண்டே 23-வது இடத்தையும், ஆப்பிள் சிஇஒ டிம் குக் 32-வது இடத்தையும் பிடித்துள்ளனர். வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் 43 வது இடத்தில் உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.