ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க!

டீமானிட்டைசேஷன் இந்தியாவை இருண்ட காலத்திற்கு தள்ளிவிட்டது என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கும் கோமாளிகளின் முகத்தில் கரியை பூசும் வண்ணம் அடுத்த மாதத்தில் துவங்க இருக்கும் ஐந்து மாநில தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பிஜேபி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்ட 'இந்தியா டுடே' தெரிவித்துள்ளது. அதோடு உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலங்களிலும் பிஜேபியே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது. அதோடு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தேர்தல் நடக்கும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் பிஜேபி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்று இந்தியா டுடே கூறினாலும் மற்ற கருத்துக்கணிப்புகள் பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வரும் என்று கூறியுள்ளது. பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வந்தாலே போதும் அங்கே பிஜேபி ஆட்சி கண்டிப்பாக வந்துவிடும். உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் பிஜேபியே ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளது. பஞ்சாபில் மட்டும் மாற்றுக்கருத்துகள் உருவாகியுள்ளது.

இன்னொரு கருத்துக்கணிப்பான ஏபிபி சிஎஸ்டிஎஸ் பஞ்சாப் மாநிலத்தில் பிஜேபி அகாலிதளம் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்கிறது. ஆனால் இந்தியா டுடே பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்கிறது. மொத்தத்தில் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி விட்டது.

பஞ்சாபில் ஆளும் அகாலிதளம் பிஜேபி கூட்டணிக்கு எதிராக உள்ள ஓட்டுக்கள் சிதறி காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு செல்லும்பொழுது பிஜேபி கூட்டணி நூலிழையில் கூட வெற்றி பெறும் சாத்தியக்கூறு உள்ளது. பஞ்சாபில் பிஜேபிக்கு உள்ள மைனஸ் பாயின்ட் அகாலிதளம் தான். ஒரு மாற்றதிற்கு பிஜேபியை கூட்டணியின் தலைமை பதவிக்கு கொண்டு வந்தால் அங்கேயும் பிஜேபிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இந்த தடவை 15 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முடிவு வந்து விடும் என்றே தோன்றுகிறது. இங்கே சமீப காலங்களில் பிஜேபிக்கு நாகலாந்து தீவிரவாத குழுக்களை தீவிரவாத பாதையில் இருந்து மோடி திசை திருப்பியதால் அங்கே பிஜேபிக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது.மணிப்பூரில் இந்த தடவை நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

இதை விட மணிப்பூரில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க கோரி இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் இரோம் சர்மிளா புதிதாக தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். இதனால் மணிப்பூர் தேர்தல் களம் மாறி இங்கேயும் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது.

ஆக டீமானிட்டைசேஷன் பிஜேபியை பாதாளத்திற்குள் தள்ளி விடும் என்று நினைத்தவர்கள் தான் பாதாளத்திற்குள் விழுந்து கொண்டிருக்கிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் சொல்வதை கேட்கும்பொழுது நாட்டை முன்னேற்ற மோடி நடத்தும் வேள்விகளுக்கு இந்த நாட்டு மக்கள் தொடர்ந்து அங்கீகாரம் கொடுத்து வருகிறார்கள் என்றே தோன்றுகிறது.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...