ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்கும் என்கிறீர்களே அன்று உங்கள் ஆட்சியில் தி.மு.க கூட்டணி அரசின் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்கள்தானே காளைகளை காட்சி விலங்கியல் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டு உரிமையை பறித்தார் அப்போது தி.மு.க அமைச்சர்கள் மத்திய அரசில் அங்கம் வகித்து வாய் மூடி மவுனமாக இருந்துவிட்டு தற்போது மீட்டெடுப்போம் என்கிறீர்களே ஏன் இந்த இரட்டை வேடம் இன்று உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு இவ்வளவு சட்ட சிக்கல்களில் மீள முடியாமல் சிக்கிக்கொண்டிருப்பதற்கு தி.மு.க வும் தானே ஒரு காரணம்
பதவியில் இருந்த பொது வெறுமனே பேசாமல் வேடிக்கை பார்த்து விட்டு தற்போது தமிழ் மக்களை போராட்டத்தில் தள்ளும் நிலைமைக்கு அடிப்படையில் தி.மு.க வும் காங்கிரஸ் தானே காரணம். 2016ல் பா.ஜ.க ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அரசாணையை நீதி மன்றத்தால் தடுத்து நிறுத்தபட்டது அனைவருக்கும் தெரியும் அவசர சட்டம் வந்தாலும் இதே நிலைமை வரும் என்பதற்காக மத்திய அரசு நிதானமாக இந்த பிரச்னையை அணுகுகிறது தடையை நிரந்தரமாக நீக்குவது தான் நமது நோக்கமாக இருக்கிறது அது மட்டுமல்ல மத்திய அரசு வழக்காடு மன்றத்தில் மிக தெளிவாக பொறுமையாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்களை எடுத்து வைத்துள்ளது.
எனவே தான் உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பை நமக்கு சாதகமாக எதிர்பார்த்தோம் ஆனால் தீர்ப்பே வராமல் இருக்கும் பட்சத்தில் நம் நாட்டில் இருக்கும் அதிகார பூர்வ அமைப்பில் அரசே நினைத்தாலும் ஏதும் செய்ய இயலாது என்பது அனைவரும் உணர்ந்ததே. ஒருவர் உதாரணத்திற்கு தன்னை நிரபராதி என்று நமக்கு முழுமையாக தெரிந்தாலும் ஒரு வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது அவர் அதிகாரபூர்வமாக நிரபராதி என்றாலும் அவர் வழக்கு முடியும் வரை வெளியே வர முடியாது அதிகாரத்தில் இருப்பவராக இருந்தாலும் அதிகாரபூர்வமாக அவர்களால் வெளிக்கொணர முடியாது
அதே போல தான் இதுவும் மத்திய அரசு கையில் தான் தீர்ப்பு இருக்கிறது என்று அனைவரும் மத்திய அரசை விமர்சித்தார்கள் பிரச்சனை உச்ச நீதி மன்றத்தில் தான் இருக்க்கிறது என்பதே உண்மை நிச்சயமாக தீர்ப்பு வரும் தீர்ப்பிற்கு ஏற்றார் போல் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கும், தீர்ப்பு சாதகமாக இருந்தால் மகிழ்ச்சி, வரவில்லை என்றால் அதற்கு மேல் சட்டம் ஏற்றி கொண்டுவர மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் எடுக்கும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்
ஆக விதிமுறைகளில் மத்திய அரசு நடக்கிறது, விதியை மீறி நடந்தாலும் நாங்கள் ஆதரவு தருவோம் என்று தெளிவாக தமிழக மக்களின் உணர்வுகளோடு ஒன்றியே இருக்கிறோம். தவறு நடப்பதற்கு காரணமாக இருந்த தி.மு.க வும் காங்கிரஸும் பிறரை தவறாக பேசுவதை நிறுத்தி கொண்டு தங்கள் தவறை உணர்வதே சரியானதாக இருக்கும்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.