நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவை களுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவுகுறையும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
தேசியவாக்காளர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது அவர், “மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். மேலும் தேர்தல்நடத்துவதால் ஏற்படும் சிரமங்கள் குறையும். இந்தவிவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அரசியல் கட்சிகளை ஒரே மேடையில் கொண்டு வருவதற்கான முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டும். இந்தயோசனை சாத்தியமாக இருந்து, அதை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொண்டால் அது தேர்தல் ஆணையத்துக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
இதற்குமுன் இந்த யோசனைக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 2015 டிசம்பரில் ஆதரவுதெரிவித்தது. இதையடுத்து இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்துகளை மத்திய அரசு கோரியது.
ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி தேவை என தேர்தல் ஆணையம் கூறியது. மேலும் பாதுகாப்பு படையினரும், வாக்குப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவைப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம்கூறியது. இத்துடன் இதற்கு அரசியல் சட்டத்திருத்தம் தேவை எனவும் சுட்டிக்காட்டியது.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.