தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், "திரு.பிரிட்ஜோ அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்தவருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம் என்றும் கூற கடமைப்பட்டுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கடந்தகால திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோதும், தி.மு.க மாநில ஆட்சியில் இருந்தபோதும், இதுபோன்றும், இதைவிடக் கொடுமைகளும் நமது மீனவர்கள் மேல் தொடர்ந்து நடைபெற்றுவந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த ஆட்சியாளர்களுக்கு மீனவர்நலனில் அக்கறை இல்லாததால், நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. ஆனால், மோடி அரசு வந்தவுடன் தூக்குக் கயிற்றில்தொங்க இருந்த நமது மீனவர்களை மீட்டெடுத்ததுடன், தொடர்ந்து தாக்குதல் நடைபெறாமல், இரண்டரை வருடங்களாக அவர்களின் பாதுகாப்பில் தீவிர அக்கறைகொண்டு, மீனவசகோதரர்களைப் பாதுகாத்துவருவது நாம் அறிந்ததே." எனக் குறிப்பிட்டுள்ளார்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.