மத்திய பட்ஜெட் இந்தியாவின் அமிதா காலத்திற்கான பட்ஜெட் -சிவராஜ் சௌகான்

மத்திய பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சி, ஏழைகள் நலன் மற்றும் அமிர்த காலத்திற்கான பட்ஜெட் என, மத்திய வேளாண், விவசாயிகள்  நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்கள் இந்தியாவின் ஆன்மாவாகவும், விவசாயிகள் அதன் உயிராகவும், திகழ்வதை அடிப்படையாகக் கொண்ட இந்த பட்ஜெட்டில், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம்  வேளாண் விளை பொருள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், இடுபொருள் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டப்படும் எனவும் திரு சௌஹான் கூறியுள்ளார்.

3 கோடி பெண்களை  கோடீஸ்வரர்களாக்கும் நோக்குடன், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு உலகளாவிய, சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய பட்ஜெட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...