வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல

கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றிவந்த 12,000 ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தேர்தல்வாக்குறுதி எண் 181ல் கூறி, ஏமாற்றி ஆட்சிக்குவந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆசிரியர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், பொய்யான நம்பிக்கை கொடுத்துவந்த திமுக, தற்போது அறவழியில் போராடிய ஆசிரியர்களை, சமூக விரோதிகளைக் கைது செய்வதைப் போல, அத்து மீறிக் கைது செய்திருக்கிறது. வாக்களித்தமக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல என்றாலும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தரக்குறைவாக நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வீண் விளம்பரத்துக்காக, சிலைவைக்கிறோம், பூங்காக்கள் கட்டுகிறோம் என்று கடன் மேல் கடன் வாங்கி, மக்களைக் கடன் காரர்களாக்கியிருக்கும் திமுக, நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப்பெருமக்களை அவல நிலையில் தள்ளியிருக்கிறது. உடனடியாக, கைதுசெய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக் கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...