அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்து வதற்காக மே முதல் ஜூலைவரை இருமுறை பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய வெளியுறவுவட்டார அதிகாரிகள் தெரிவிக்கையில், ‛அமெரிக்க அதிபராக பொறுப் பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திரமோடி மே மற்றும் ஜூலை மாதங்களில் பிரதமர் மோடி அமெரிக்கசெல்ல திட்டமிட்டுள்ளார்.' எனத் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் புதியவிசா கொள்கையால் அமெரிக்காவில் பணி புரியும் லட்சக்கணக்கான இந்திய ஐ.டி., வல்லுனர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அமெரிக்காவில் இந்தியர்களின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தசூழலில் பிரதமர் மோடி டிரம்ப்பை சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடி, மே கடைசியில் பெர்லினுக்கும், ஜூன் முதல்வாரத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். எனவே அவரது அமெரிக்கபயணம், மே முதல் வாரத்தில் மற்றும் ஜூன் கடைசியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.