‘இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம்’ என ரஷ்யா செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில் நாளை (ஜூலை 08) மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி, இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இரு நாட்டு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள் குறித்தும் புடினுடன் ஆலோசனை நடத்தும் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
மோடி வருகை
‘இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம். ரஷ்ய அதிகாரிகளுடனான இந்தியப் பிரதமரின் சந்திப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்’ என ரஷ்யா செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ஜூலை 9ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வேன் டெர் பெலனை சந்தித்து பேசுகிறார். 41 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரியா செல்லும் முதல் பிரதமர், நரேந்திர மோடி ஆவார். அங்கிருந்து ஜூலை 10ம் தேதி பிரதமர் தாயகம் கிளம்புகிறார்.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |