ஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும், எடுத்துக் காட்டாகவும் நடத்தி முடிக்கவேண்டும்

மத்தியமந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவேண்டும். எந்தவொரு அழுத்தத்துக்கும் ஆளாகாமல் காவல் துறையும், செயல்படவேண்டும். ஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும், எடுத்துக் காட்டாகவும் நடத்தி முடிக்கவேண்டும்.

அங்கு வாக்காளர்களுக்கு தங்கம் வழங்கப்படுகிறது. எடைக்கு எடை தங்கம்வழங்க 2 கழக கட்சிகளும் தயாராக உள்ளன. இதில் ஒருகட்சி மற்றொரு கட்சி மீது புகார் கூற முடியாது. பணம்கொடுப்பது, இலவச பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை தொடங்கியதே தி.மு.க.வினர் தான். வாக்காளர்களுக்கு பணம்கொடுப்பதை தடுக்க வேண்டும். கள்ள ஓட்டு போடுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆர்.கே. நகர் தேர்தலில் பாரதியஜனதா தனது முழுபலத்தையும் காட்டும். பாரதிய ஜனதா வெற்றியை நோக்கி தனதுபயணத்தை தொடங்கி உள்ளது.

அ.தி.மு.க.வின் இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அது எம்ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட சின்னம். தற்போது அந்தசின்னம் முடக்கப்பட்டு உள்ளதால் தொண்டர்களுக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. சின்னம் முடக்கப்பட்டதற்கு அ.தி.மு.க. தலைமைதான் காரணம் ஆகும். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பம்தான் இதற்கு காரணம். இதன் மூலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கே அவமானத்தை உண்டாக்கி உள்ளனர்.

1989-ல் இரட்டை இலைசின்னம் முடக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக பிரிந்ததால் அந்தசின்னம் முடக்கப்பட்டது. அப்போது முடக்கப்பட்டதற்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசை யாரும் குற்றம் சாட்டவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் வீடுவழங்க இலங்கை செல்வதில் தவறு இல்லை. தமிழனுக்கு நல்லதுசெய்பவர்கள் யாராக இருந்தாலும், எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரியாக இருந்தால்கூட அவரை பாராட்டுவேன்.

தம்பித்துரை, கமலஹாசன், பன்னீர் செல்வம் என எல்லோருமே எங்களுடன் இணக்கமாகதான் உள்ளனர். தனிப்பட்ட முறையில் திருமா வளவன், திருநாவுக் கரசர் கூட இணக்கமாக உள்ளனர். பாஜக பொறுத்தமட்டில் அனைவருடனும் நட்புவைக்க விரும்புகிறது.

தமிழகத்தின் கல்வித்தரம் கடந்த 50 ஆண்டுகளில் சீரழிந்துள்ளது. இதற்குகாரணம் இருகட்சிகளும் செய்த துரோகம்தான். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.39 ஆயிரம்கோடி கேட்கிறார்கள். மத்திய அரசு ரூ.1748 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் எந்த அடிப்படையில் தமிழகஅரசு இவ்வளவு தொகையை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...