பணம் கொடுப்பதை தடுக்கவே முடியாதுங்க! 2009 ல் ஆளுங்கட்சியாக இருந்த திமுக இதைத்தான் செய்தது! தேர்தல் ஆணையம் என்ன செய்தது? இப்போதும் எதுவும் செய்ய முடியாதுங்க! இன்னொருநாள் தேர்தல் வந்தாலும் இதுதானே நடக்கும்? தேர்தல் கமிஷனால் என்ன செய்ய முடியும்? பாஜக வால் என்ன செய்யமுடியும்? இதுதான் பலரின் கேள்வியாக உள்ளது! இப்படி கேட்பவர்கள் குற்றவாளிகளின் ஆதரவாளர்கள்!
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஆணையம்தான், ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவணம் அல்ல தேர்தல் ஆணையம்! காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பாஜக தலையிடாது! வருமான வரி புலனாய்வுத்துறையின் செயல்பாட்டிலும் பாஜக அரசு தலையிடாது! மத்திய அரசின் தலையீடு இல்லாததால் தேர்தல் ஆணையமும் வருமானவரி புலனாய்வு துறையும் தங்கள் பணியினை சரியாக செய்கிறார்கள்!
எனவேதான் 2009 ல் திருமங்கலத்தில் திமுக அதிகமான பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்தபோது அமைதியாக இருந்த தேர்தல் ஆணையமும் வருமானவரி புலனாய்வுத்துறையும் இப்போது செயல்படத்துவங்கியுள்ளது!
பா.சிதம்பரம், ’இது கறுப்புப்பணமா? வெள்ளைப்பணமா? கருப்புப்பணத்தை ஒழித்துவிட்டதாக சொன்னீர்களே!’ – என்று நக்கலடிக்கிறார்! ’ராம்மோகன்ராவ், சேகர்ரெட்டி போன்றோர்களுடன் உங்களைப்போன்றவர்கள் சிலரும் வங்கி அதிகாரிகளும் சேர்ந்து வங்கியில் மாற்றினார்களே அந்தபணமாக இருக்கலாம்! இந்த வருடத்தில் சேர்க்கப்பட்ட கருப்புப்பணமாகவும் இருக்கலாம்!’ என்பது பா.சிதம்பரத்திற்கு எனது பதிலாகும்! இந்த பணம் எப்படி கிடைத்தது என்னும் விசாரணையில் பா.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்திக்கையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்!
திருமங்கலத்தில் இருந்து ஆர்.கே.நகர் வரை வாக்குக்கு பணம் கொடுத்து கொடுத்ததைவிட லட்சம் மடங்கு அதிகமாக அரசியல் கொள்ளை அடிப்பது கழகங்களின் தொழிலாகி விட்டது! கழகங்கள் இல்லா தமிழகத்தை கான்பது நல்லவர்களின் பணியாக இருக்கவேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்!
—- குமரிகிருஷ்ணன்
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.